01st January 2022 01:25:21 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதன்கிழமை (29) விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாயத்திற்கான செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது நடப்பாண்டு நிறைவை முன்னிட்டு தளபதியினால் படையினருக்கான சிறப்புரையொன்றும் நிகழ்தப்பட்டது.
இதன்போது வருகைத் தந்த தளபதிக்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்ஜய வணசிங்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது தளபதியின் வாகன அணிவகுப்பு நுழைவு வளாகத்திற்குள் வந்த போது 17 வது கஜபா படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க முல்லைத்தீவு படையினருக்கான உரையினை நிகழ்த்துவதற்காக தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி "முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை நீங்கள் அனைவரும் உறுதிசெய்து, அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும், ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் மீன்பிடித் தொழிலை நம்பி, நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். அதேபோல், உங்கள் சமூக நிவாரணப் பணிகளை மேலும் விரிவுபடுத்துங்கள். மேலும் முல்லைத்தீவு மக்களை போதைப்பொருள் பாவனை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்காமல் பாதுகாப்பளிக்கும் அதேநேரம், அவர்களுக்கான நிதி உதவிகள், மத ஸ்தலங்களை புனரமைத்தல், விளையாட்டு மைதான வசதிகளை மேம்படுத்தல், பொதுச் சேவைகளை வலுப்படுத்தல் என்பவற்றிற்காக படையினர் முன்னெடுத்து வரும் சேவைகளை பாராட்டியதோடு அவற்றை விரிவுப்படுதுதன் அவசியத்தையும் ஜெனரல் ஷவேந்திர சில்வா எடுத்துரைத்தார்.
மேலும், தனது பதவிக்காலத்தில் இராணுவத்தில் உள்ள அனைத்து தரப்புகளுக்கும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடிருந்ததாகவும், ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான பங்களிப்புக்கள், வறிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதற்காகவும் தற்போது இவ்வாறானதொரு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காகவும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு நன்றி கூறினார். இறுதியாக இவ்வாண்டின் இறுதி தருவாயில் இருப்பதால் சகலருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறிய தளபதி தேசத்தின் மிகுந்த வரவேற்பை பெற்ற அமைப்பாக இராணுவம் விளங்குவதால் சகலரும் சிறந்த முறையில் கடமைகளை செய்ய வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.
அதேபோல் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான பயிற்சிகளை பெற வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமென வலியுறுத்திய தளபதி அதற்காகவே புத்தலவில் புதிய போர் பயிற்சி கல்லூரி நிறுவப்பட்டது என்றும் இதனால் இராணுவத்திற்கு நன்கு தகைமைமையும் பயிற்சியும் பெற்ற அதிகாரிகள் கிடைப்பர் என்றும் தளபதி தெரிவித்தார். இதன் போது முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூறவும் அவர் மறக்கவில்லை.
அதனைடுத்து, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் முல்லைத்தீவு படையினர் சார்பாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனைடுத்து முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வாழ்த்துக்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் படையினருடன் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வை தொடர்ந்து விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்ட பின்னர் தலைமையக வளாகத்தில் வில்வ மரக் கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.
படைப்பிரிவு தளபதிகள், முல்லைத்தீபு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பிரதேச தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.