Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2021 16:30:43 Hours

மியூசியஸ் மகளிர் கல்லூரி மாணவிகளின் உதவியுடன் வறிய குடும்பத்திற்கு வீடு நிர்மாணம்

கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் பழைய மாணவியர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியை கொண்டு, தெவஹூவ பிரதேசத்தில் வசித்துவரும் அநாதரவான குடும்பம் ஒன்றிற்கு வீடொன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (13) நடைபெற்றது.

111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க இந்நிழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததோடு மத அனுட்டானங்களுக்கு மத்தியில் சுப வேளையில் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

பயனாளியான 20 ஏக்கர் தோட்டம், தெவஹூவ ஹினுக்கலை என்ற முகவரியில் வசிக்கும் திருமதி டபிள்யூ ஏ மதுஷா பிரஷானி தர்மபால அவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

111 பிரிகேடின் படையினர் பொறியியலாளர்களின் வழிகாட்டல்களை பின்பற்றி வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொண்டனர்.