Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2021 20:11:41 Hours

அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து இரத்த தானம்

கிளிநொச்சி வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க பூநகரியிலுள்ள 66 வது படைப்பிரிவின் 20 (தொ) விஜயபாகு காலாட் படையணி சிப்பாய்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (10) கிளிநொச்சி இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்குவதற்காக அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் 115 படையினர் ,5 பொலிஸார் மற்றும் 21 பொது மக்களும் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 66 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் 661 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமிந்த தயாவன்ச உள்ளிட்டோர் நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

கிளிநொச்சி இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் ஏனைய சிற்றூழியர்களும் மேற்படி மனிதாபிமான நிகழ்வில் கலந்துகொண்டனர்.