Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2021 19:30:27 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் சேதன பசளை உற்பத்தி தொடர்பில் கற்கை

மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் அழைப்பின் பேரில் திங்கட்கிழமை (13) இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் ‘பசுமை விவசாய முறைகள்’ என்ற தலைப்பில் விரிவுரையொன்று நடத்தப்பட்டது.

சேதன பசளை உற்பத்தித் துறையில் நிபுணரான சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மகளிர் மருத்துவ நிபுணரான வைத்தியர் கசுன் தாரக, பல வருடங்களுக்கு முன்பிருந்து இம்முறை எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகின்றது என்பது தொடர்பில் விளக்கமளித்தார். அதேபோல் அரச காலத்தில் இலங்கையின் பயிர் செய்கை முறைகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருந்தமை தொடர்பிலும் வியசாயத்தை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்தும் அவர் மேலும் தெளிவுபடுத்தல்களை விளக்கினார்.

மேற்படி அமர்வுகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட திட்டமிடல் அதிகாரி பிரிகேடியர் ஆர்எம்ஜேபி ரத்நாயக்க, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் திட்டமிடல் அதிகாரி பிரிகேடியர் டீசீஎல் கணேபொல, 144 வது பிரிகேட் தளபதி கேணல் கொடிதுவக்கு மற்றும் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.