Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2021 20:00:27 Hours

59 வது படைப்பிரிவினால் முல்லைத்தீவில் பல சமூகப் பணிகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 மற்றும் 592 பிரிகேடுகளின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 24 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்களால் அவற்றை அண்மித்து வசிக்கும் மக்களுக்காக கடந்த சில வாரங்களில் பல்வேறு மனிதநேய பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய தியாகிகள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் 59 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பு மற்றும் முன் முயற்சியால் ஊனமுற்றவர்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட புதிய கழிவறை புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான திரு எம் கஜன் அவர்களுக்கு தெற்கின் திரு.நதீர ஜெயசிங்க அவர்களின் நிதி உதவியுடன் 591 பிரிகேடின் 12 இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் வட்டுவாகல் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பயனாளியிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதேவேளை, இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சுமதி குழுமத்தின் தலைவர் திரு ஜகத் சுமதிபால அவர்கள் வழங்கிய நிதியுதவியில் சிலாவத்தை - 88 பொதுப் பகுதியில் தகர வீட்டில் வசித்து வந்த திரு திரு.ஜே.லக்ஷிகன் ஜூட் அவர்களின் குழந்தைகள் உட்பட குடும்பத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, 591 வது பிரிகேடின் 24 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்களால் வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

அதேபோல், புத்தரிக்குடா கிராமசேவை பிரிவில் குறைந்த வருமானத்தில் வாழும் திருமதி நந்தனி மல்லிகாவின் குடும்பத்தின் நிலைமையை கருத்திற்கொண்டு, 592 வது பிரிகேட்டின் வேண்டுகோளுக்கு இணங்க வர்த்தகர் திரு யோகராஜா அவர்களின் நிதி உதவியுடன் 592 வது பிரிகேடின் 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையிணியின் சிப்பாய்களால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

முள்ளியவளை வித்யானந்த தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 8 மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்வதில் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டு 59 வது படைப்பிரிவினரால் 8 மிதிவண்டிகள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. இராணுவத்தினரின் வேண்டுகோளுகிணங்க பிரிகேடியர் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க, திருமதி ஏ.ஏ அனுஷா நிபுனி உபேந்திர மற்றும் கலாநிதி தசந்தி சோமரத்ன ஆகியோர் இணைந்து இந்த சைக்கிள்களுக்கான நிதி உதவியை வழங்கினர். பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், முல்லைத்தீவு நந்திக்கடலில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு 59 ஆவது படைபிரிவினரின் வேண்டுகோளின் பேரில் திருமதி ஷிராணி டி சில்வா மற்றும் திரு உதார மதுரப்பெரும ஆகியோரால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு 80 பாடசாலை புத்தகங்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், மற்றுமொரு சமயப் பணியாக 59 வது படைப்பிரிவின் பிக்குகள் மற்றும் விகாரையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இராணுவத்தின் வேண்டுகோளுக்கிணங்க திரு கயான் பெரேரா அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியில் கோகிலாய் சம்போதி விகாரைக்கு வடிகால் உபகரணங்கள் , எல்ஈடி மின்குமிழ்கள் மற்றும் 1000 லீற்றர் பிளாஸ்டிக் நீர் தொட்டிகள் ஆகியவை இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

அனைத்து சமூகத் திட்டங்களும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் ஆசிர்வாதத்துடன் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார அவர்களால் 591 மற்றும் 592 வது பிரிகேட் தளபதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றன. உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.