Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2021 16:35:28 Hours

இரண்டு நாள் செயலமர்வில் அதிகாரிகளின் கட்டளை வகிபாகம் தொடர்பில் பயிற்றுவிப்பு

சமிக்ஞை கல்லூரியினால் கட்டளை அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரி நிலைக்கு உயர்வு பெறவுள்ளவர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு நாள் செயலமர்வானது டிசம்பர் 9-10 திகதிகளில் தியத்தலாவ மெர்கியூரி ஹவுஸில் ஆரம்பமானது.

இந்த செயலமர்வில் தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் ஆரம்ப உரையை நிகழ்த்தியதுடன், விரிவுரைகளையும் ஆரம்பித்து வைத்தார். அதனையடுத்து சமிக்ஞை பிரிகேடின் தளபதி பிரிகேடியர் ஜி.எல்.எஸ்.டபிள்யூ. லியனகே தனது விரிவுரையை ஆரம்பித்தார்.

அதன் முதல் நாளுக்கான பாடநெறி பரந்த விடயப்பரப்புக்களை உள்ளடக்கியிருந்தன. அதற்கமைய கட்டளை அதிகாரியொருவரின் கடமைகள் தொடர்பில் சட்டப் பணிப்பகத்தின் மேஜர் என்ஆர்எம்ஆர்ஏ கிராகம அவர்களால் நிகழ்த்தப்பட்டதோடு, இந்த விரிவுரை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு இசுறு அஷிந்த ஏக்கநாயக்க அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. நிர்வாகம், நிர்வாகச் செயற்பாடுகளின் வகைகள் மற்றும் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் என்பன தொடர்பில் மேற்படி விரிவுரையில் விளக்கமளிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்வானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லிலாந்த சமரநாயக்கவினால் ரோபோட்டிக்ஸ் அறிமுகப்படுத்தி ஆற்றிய விரிவுரையுடன் ஆரம்பமாகியதோடு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தளபதி கே.எச்.என்.குலபதி ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் வரைபடம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி கேணல் கே.வி.பி தம்மிக்க மற்றும் கணக்காய்வு பணிப்பகத்தின் மேஜர் ஆர்.எம்.சி.டி ஜெயவர்தன ஆகியோர் 'நிதி சார் சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பது' விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இறுதி உரையானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் கேஏடபிள்யூஎஸ் ரந்தாயக்க அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.