13th December 2021 16:00:28 Hours
தியத்தலாவ பொதுப் பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கர்ப்பிணிப் பெண்களின் போஷாக்கு நிலைமைகளை கருத்தில் கொண்டு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இலவச போஷாக்கு பொதிகளை விநியோகிக்கும் திட்டமொன்று தியத்தலாவ 'விரு கெகுலு' ஆரம்ப பிரிவு பாடசாலையில் வியாழன் (9) நடத்தப்பட்டது.
இதன்போது பிரதேசத்திலுள்ள 25 அநாதாரவான குடும்பங்களின் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் அவசியமாக போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய அன்கர் பொண்டேரா தனியார் நிறுவனத்துடன் இணைந்து பால்மா பக்கட்டுக்கள் மற்றும் போஷனை பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு, இவற்றோடு பெலியத்த ஸ்ரீ சுதர்மாஷ்ரம விகாரையின் தலைமை தேரர் வண. புத்தியாம தம்மசேன தேரரினால் சீப்பு,சவர்க்காரம், பவுடர், நுளம்பு வலைகள், பம்பஸ், சாம்போ போன்ற குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அன்கர் பொண்டேரா தனியார் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் ஜீகேஐ விதானாராச்சி, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிருவாகம் பிரிகேடியர் டிசீசீடீஆர் வைத்தியசேகர மற்றும் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என்.டீ.பி ஜயதிலக்க ஆகியோர் மேற்படி விநியோக நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.