Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2021 15:45:28 Hours

இயந்திரவியற் காலாட் படையணி பயிற்சி மையத்தில் புதிய பிரிவுகள் திறந்து வைப்பு

கெக்கிராவை தம்புலுஹல்மில்லேவ இயந்திரவியற் காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறி பார்த்து சுடுதல் அறை, திறந்தவெளி அரங்கு, இயந்திரவியற் காலாட் படையணியின் பயிற்சி நிலையத்திற்கான பரிசோதனை அறை என்பன 2021 டிசம்பர் 04 அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது படையணியின் நிலையத் தளபதி கொஷினா பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

சிறிய ரக துப்பாக்கி தொழில்நுட்ப களத்திள் உண்மையான குறிபார்த்துச் சுடுதல் அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் இயலுமை காணப்டுவதோடு இதனால் செலவும், நேர விரையமும் மட்டுப்படுகின்றது. இத்திட்டம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் கண்டுபிடிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பல்வேறு செயற்பாடுகளுக்காகவும் பயன்படுத்த உகந்த வகையில், திறந்தவெளி அரங்கமும், பயிற்சி நிலையத்தின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட மருத்துவ பரிசோதனை அறையும் திறந்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையம், இராணுவத் தலைமையகம், இயந்திரவியற் காலாட் படையணி தலைமையகம் மற்றும் இயந்திரவியற் காலாட்படையணியின் அனைத்து சிப்பாய்களும் மேற்படி பணிகளுக்காக பங்களிப்புகளை வழங்கியிருந்ததோடு, அவர்களது தொழில்நுட்ப திறன் மற்றும் ஆளணி வளத்தையும் வழங்கியுள்ளனர்.

இந் நிகழ்வுகள் இயந்திரவியற் காலாட் படையணி சிப்பாய்கள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் பங்கேற்புடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டது.