Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2021 13:52:00 Hours

சுற்றுச்சூழல் மீது பற்றுள்ள இராணுவம், கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பணியாளர்களால் கரையோரப் பகுதிகள் தூய்மையாக்கம்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 வது படைப் பிரிவின் 231 வது பிரிகேடின் சிப்பாய்கள் CERI நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளருடன் இணைந்து கல்லடியிலிருந்து காத்தான்குடி வரையிலான 4 கிலோமீற்றர் நீளமான கரையோர பகுதிகளில் சனிக்கிழமை (11) தூய்மையாக்கல் பணிகளை மேற்கொண்டனர்.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எம்.என்.கே.டி.பண்டார அவர்களால் CERI அமைப்பின் திரு. E. தர்ஷன் விஜயரத்தினம் அவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக பணி 6 அதிகாரிகள், 30 கடற்படை வீரர்கள், 46 பொலிஸார், தேசிய மாணவ சிப்பாயினை சேர்ந்த 17 உறுப்பினர்கள் மற்றும் 40 இராணுவத்தினர் மற்றும் 10 பிரதேசவாசிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றன.

அனைத்து பங்கேற்பாளர்களும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் திருப்தியுடன் சில மணிநேரங்களில் திட்டத்தை நிறைவு செய்தனர்.