Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2021 13:00:05 Hours

தனியார் நிறுவன்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு செயலமர்வு

கொழும்பை தளமாகக் கொண்ட Oxford நிறுவனத்தின் அனுசரணை உதவி மற்றும் 54 ஆவது படைப் பிரிவின் தளபதியின் ஆதரவுடன் 543வது பிரிகேட் சிப்பாய்களால் மன்னார் பாத்திமா மத்திய நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அங்குள்ள மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் துஷ்பிரயோக தடுப்படுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான செயலமர்வு வௌ்ளிக்கிழமை (03) நடைபெற்றது.

மேற்படி நன்கொடையாளர்களின் உதவியுடன் மேற்படி பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கற்றர் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 15 விரிவுரையாளர்கள் அடங்கிய குழுவினர், போதைப் பழக்கத்தின் அச்சுறுத்தலான தன்மை குறித்து கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தினர்.

11 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 7 வது விஜயபாகு காலாட்படையணியின் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட 23 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மூன்று மணிநேரமாக இடம்பெற்ற மேற்படி செயலமர்வுகளில் கலந்துகொண்டனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது படைப் பிரிவின் 543 வது பிரிகேடினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் மூலம் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.