Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2021 13:30:05 Hours

592 வது பிரிகேட் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை திறப்பு

எவலோன் ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு முள்ளியவளை - மேற்கு கிராம சேவையாளர் பிரிவு 103 இல் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய ஆரம்ப பிரிவு பாடசாலை வியாழக்கிழமை (2) திறந்துவைக்கப்பட்டது. பாடசாலைக்கு புதிதாக அனுமதி பெற்ற சிறுவர்களின் கலாச்சார அம்சங்களுடன் இந் நிகழ்ச்சி மேலும் மெருகூடடப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரினால் பெயர் புதிய பாடசாலையின் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் 59 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.டி.சூரிய பண்டார புதிய ஆரபம்ப பிரிவு ஆசிரியையுடன் இணைந்து புதிய கட்டிடத்தின் கதவைத் திறந்துவைத்தார்.

வரவேற்பு உரையின் பின்னர், புதிய ஆரம்ப பிரிவு மாணவர்களின் சேர்க்கை பதிவு செய்யப்பட்டதோடு, அதே சந்தர்ப்பத்தில் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 592 வது பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 23 வது இலேசாயுத காலாட்படையணி சிப்பாய்களால் கட்டிடத்தின் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

படையினர் மற்றும் மதகுருமார்கள், எவலோன் ஸ்ரீலங்கா நிறுவன பணிப்பாளர் திரு கேதிஷ், கரையோர பிரதேச செயலாளர் மற்றும் ஏனையோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். சிறார்கள் பாடசாலைகளுக்குள் செல்லும் முன்பாக மத குருமார்களால் ஆசிர்வதிக்கப்பட்டனர்.

8 டிசம்பர் 2020 அன்று, நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்த போதிலும் கொவிட் -19 தொற்றுநோய் பரவலால் அந்த பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது. மேற்படி திறப்பு விழா உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.