Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2021 18:40:14 Hours

அதமேதகு ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

“இலங்கையில் பொதுவாக வழங்கப்படும் கல்விக்கும் 21 ஆம் நூற்றாண்டில் நமது நாடு வளர்ச்சியடையத் தேவையானவற்றுக்கும் இடையே பொருந்தாத தன்மை உள்ளது. இதனால்தான் எமது மூன்றாம் நிலைக் கல்வி முறைமைகளில் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (9) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு படை பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார்.

'பல்கலைக்கழக மாணவர்கள் எந்த பட்டப்படிப்பைப் பின்பற்றினாலும், அவர்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்பத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விமர்சன சிந்தனை, தொழில்முனைவு மற்றும் ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட இன்றைய உலகில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மற்றைய திறன்களையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்' என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

'இந்தச் சீர்திருத்தங்களில் சில ஏற்கனவே நமது பல்கலைக்கழகங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன என்பதையும், அடுத்த ஆண்டு மேலும் பலவற்றை அறிமுகப்படுத்தவுள்ளமையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை பத்தாயிரத்தால் அதிகரிப்பது எனது நிர்வாக கால சாதனைகளில் ஒன்றாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

'எவ்வாறாயினும், இந்த அதிகரிப்புடன் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தாலும் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியை அணுக முடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னும் இருப்பார்கள். ஏனென்றால் தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு உள்நாட்டு பல்கலைக்கழக அமைப்பில் போதுமான திறன் இல்லை. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் எமது இளைஞர்களுக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கு முற்றிலும் எந்தக் காரணமும் இல்லை. உலகில் உள்ள அனைத்து சிறந்த பல்கலைக்கழகங்களும் மாநில பல்கலைக்கழகங்கள் அல்ல. பெரும்பாலானவை சுதந்திரமான சுயராஜ்ய நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன’ என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார்.

அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் பட்டங்களை விற்கும் கல்வி நிலையங்கள் என்ற பழைய சிந்தனைகள் முட்டாள்தனமானவை' என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இது சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு படை பல்கலைக்கழகத்தின் 32வது பொது பட்டமளிப்பு விழாவாகும்.

ஒரு PhD பட்டதாரி, 227 முதுகலை பட்டதாரிகள் மற்றும் முதுகலை டிப்ளோமா பெற்றவர்கள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு படை பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களில் இருந்து 1180 இளங்கலை பட்டம் பெற்றவர்கள் உள்ளடங்களாக இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 1408 பட்டதாரிகளில் அடங்குவர்.

ஜனாதிபதி ராஜபக்ஷ சிறப்பு விருதுகளை சிறந்த இராணுவ அதிகாரியாக கெடட் அதிகாரி எஸ்.எச். ரொட்ரிகோ, சிறந்த கடற்படை அதிகாரியாக லெப்டினன்ட் எஸ்.டி கருணாசேன மற்றும் சிறந்த விமானப்படை அதிகாரியாக எஸ்.கே.எஸ். ருக்ஷான் என்பவருக்கும் இன்டேக் 34 இன் சிறந்தனைத்து செயல்திறனுக்கான விருது ஹொனர் லெப்டினன் எல்.டி.ஐ. லியனாராச்சிக்கு வழங்கினார்.

முப்படை அதிகாரிகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு படை பல்கலைக்கழகம் 1981 இல் நிறுவப்பட்டது. 2009 ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் இது முழு அளவிலான பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது. 2009 இல், சிவிலியன் மாணவர்களுக்கு அங்கு படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, முப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளை தொடர முடியும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தற்போது பொது நலவாய பல்கலைக்கழகங்களின் சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமாக மாறியுள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவின் தலைவர்கள், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் ஜெராட் டி சில்வா, உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன், மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அனுசரணை)

முழு உரை பின்வருமாறு

வேந்தர்

சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம்

ஜெராட் டி சில்வா

கௌரவ அமைச்சர்கள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள்

உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ்

உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி இராணுவ தளபதி/கடற்படை தளபதி/ மற்றும் விமானப்படை தளபதி

பொலிஸ்மா அதிபர்

நி்ர்வாக சபை உறுப்பினர்கள்

கல்விசார் ஊழியர்கள்

சிறப்பு விருந்தினர்கள்

பெற்றோர்கள் மற்றும் பட்டதாரிகள்

இன்று பிற்பகல் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழாவில் உங்களிடம் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நிகழ்வில் பட்டம் பெறும் அனைத்து மாணவர்களும் தங்கள் படிப்பின் போது கடுமையாக உழைத்தமைக்காக நான் வாழ்த்துகிறேன், மேலும் அவர்கள் அனைவரும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இலங்கையின் தனித்துவமான நிறுவனமாகும்.

ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தற்போது பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு பல மூன்றாம் நிலை கல்வித் தகுதிகளை வழங்குகிறது.

இந்த பல்கலைக்கழகத்தின் பல பட்ட நிகழ்வானது வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்த்துள்ளது.

இன்று, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இலங்கையின் சிறந்த மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளதுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் மிகவும் திறமையான பட்டதாரிகளை உருவாக்கும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் அவர்களின் தலைமைத்துவ திறன்கள், குழுப்பணி திறன்கள், ஒருமைப்பாடு மற்றும் தேசபற்று ஆகியவற்றிற்காக புகழ்பெற்றவர்கள் மற்றும் தொழில்வான்மையாளர்கள் மத்தியில் அதிக கேள்வி உள்ளது.

சவால்களை சந்திக்காமல் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இந்த நிலைக்கு வந்துவிடவில்லை.

இன்றும் கூட சில குழுக்களால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக எதிர்ப்புகள் உள்ளன.

இந்த குழுக்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நல்ல பணிகள் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலான செயற்பாடுகளையும் புறக்கணித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக இலங்கையின் கல்வி முறைக்கு எதிரான இந்த மனப்பாங்கின் நோக்கம் எனக்கு புரியவில்லை.

நமது நாட்டின் கல்வி முறைமைகள் உலகின் தற்கால தேவைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பது ரகசியமல்ல பொதுவாக இலங்கையில் வழங்கப்படும் கல்விக்கும், 21 ஆம் நூற்றாண்டில் நமது நாடு வளர்ச்சியடையத் தேவையானவற்றுக்கும் இடையே பொருந்தாத தன்மை உள்ளது.

இதனால்தான் கல்விச் சீர்திருத்தங்கள், குறிப்பாக நமது மூன்றாம் நிலைக் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பல்கலைக்கழக மாணவர்கள் எந்த பட்டப்படிப்பைப் பின்பற்றினாலும், அவர்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்பத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அவர்கள் ஓரளவேனும் கணினி அறிவு இருக்க வேண்டியது அவசியமாகும்.

விமர்சன சிந்தனை, தொழில்முனைவு மற்றும் ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட இன்றைய உலகில் வெற்றிக்குத் தேவையான பிற திறன்களையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இவற்றில் பல சீர்திருத்தங்கள் ஏற்கனவே நமது பல்கலைக்கழகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், அடுத்த ஆண்டு இன்னும் பலவற்றை அறிமுகப்படுத்த உள்ளதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சீர்திருத்தங்கள் நமது பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் பட்டம் பெற்ற பிறகு சிறந்த குடிமக்களாக இருப்பதற்குத் தேவையான திறன்கள் மற்றும் திறன்களை அவர்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன்.

இலங்கையின் கல்வி முறைமை மீதுள்ள அதிக கட்டுப்பாடுகளே பிரச்சினையாக அமைந்துள்ளது.

எனது நிர்வாகத்தின் ஆரம்பகால சாதனைகளில் ஒன்று இலங்கை முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை பத்தாயிரத்தால் அதிகரிப்பதாகும்.

எவ்வாறாயினும், இந்த அதிகரிப்பின் பின்னரும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் பல்கலைக்கழகக் வாய்ப்பு கிடைக்காத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பர்.

ஏனெனில் பல்கலைகழகங்களுக்கு தகுதிபெறுகின்ற அனைத்து மாணவர்களையும் உள்வாங்குவதற்கான கொள்ளவு உள்நாட்டு பல்கலைக்கழங்களிடம் இல்லை. பல்கலைக்கழகங்கள் இல்லாமையால் ஏற்படும் விளைவுகள் சிக்கலானவை

இது முழு கல்வி முறைமையிலும் வாய்ப்புக்களை பெருமளவில் குறைத்து விடுவதாக அமைந்துள்ளது.

மாணவர்கள் வெற்றி பெற விரும்புவதை விடவும் தோல்வி அடைவதை மையப்படுத்தியே இந்த முறைமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாதாரண தர பரீட்சையில் தோற்றி உயர் தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களிடம் இந்த நிலைமையை நாம் காண முடியும்.

ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளுக்குச் சென்று பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெருந்தொகையினரிடம் இதனைக் காண்கிறோம்.

இந்த மாணவர்களின் பெற்றோர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் அதிக செலவை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாடு இழக்கின்றது. இவ்வாறான மாணவர்கள் பட்டம் பெற்று இலங்கைக்கு திரும்புவதற்கு மாறாக அந்தந்த நாடுகளிலேயே வசிப்பதும் பெரும் இழப்பாகும்.

குறைந்த செல்வந்த பெற்றோரைக் கொண்ட மாணவர்கள் இலங்கையில் கற்பிக்கப்படும் பல்வேறு பாடநெறிகளைப் பின்தொடர்கின்றனர், இருப்பினும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் முழுமையான கல்வியை வழங்குவதில்லை.

பெரும்பான்மையானவர்கள் மேலதிகக் கல்வியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளைத் தேடுகிறார்கள்.

நம் நாட்டில் பல்கலைக்கழகக் கல்வியின் உயர் மதிப்பின் காரணமாக, இந்த மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இல்லாவிட்டாலும், வரவிருக்கும் ஆண்டுகளில் தோல்வியடைந்தவர்களாக உணரும் நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலைமை தொடர்வதை ஏற்றுகொள்ள முடியாது.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

அவை உள்நாட்டு பல்கலைக்கழகங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை உலகிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் அல்ல பெரும்பாளான நிறுவனங்கள் இலப நோக்கமற்ற நிறுவனங்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும் இவ்வாறான நிறுவனங்களை நிறுவுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

மேற்படி எதிர்பார்ப்பை சாத்தியமாக்க வேண்டமெனில் அதனை செய்யலாம்.

அதற்கு எதிரான பாரம்பரிய எண்ணக்கருக்கள் தகர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அரச பல்கலைக்கழகங்களை தவிர ஏனைய பல்கலைக்கழகங்கள் பட்டம் விற்கும் நிலையங்கள் என்பது முட்டாள்தனமானதாகும்.

மாணவர்களை சோர்வடைய செய்யும் பழமையான சிந்தனைகளுக்கு மாறாக புதிய வகையில் சிந்திக்க வேண்டும்.

இந்த விடயங்களை நிறுத்தாவிடின் இன்னும் பல ஆண்டுகள் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இந்நிலை தொடர்வதை அனுமதிக்க நான் தயாராக இல்லை.

அரச துறைக்கு புறம்பாக நிறுவப்படும் பல்கலைக்கழகங்களில் கட்டணம் செலுத்தாமல் பயில முடியாததால் அவற்றில் பட்டம் விற்பனை செய்யப்படுகின்றது என்பதில் அர்த்தமில்லை.

அரசாங்கத்திற்கு புறம்பாக பல்கலைக்கழங்களை அமைப்பது வெறும் கவலைக்குரிய காரணம் மட்டுமல்ல அது மிகப் பெரிய குற்றமாகும். அதேபோல், அரசாங்கம் தனியார் என்று கருதாமல் அனைத்து நிலைமைகளையும் பல்கலைக்கழகங்களையும் வரையறுக்க வேண்டியது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணியாகும்.

கட்டணங்களை அறவிடும் பல்கலைக்கழங்கள் அவற்றின் தரப்தை பராமரிக்காத பட்சத்தில் அவை இறப்பை சந்திக்க நேரிடும்.

பட்டப்படிப்பிற்கு பின்னர் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தரும் இயலுமையற்ற பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல விரும்புவதில்லை. .

வருகை பதிவுகள் மட்டுப்படுகின்ற போது எந்தவொரு பல்கலைக்கழககும் அதன் பராமரிப்பு தன்மையை பேணுவதில்லை.

அதேபோல் அதிகளவான பல்கலைக்கழங்களை தோற்றுவிப்பதால் மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியில் போட்டிகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

இலங்கைக்குள் பல்கலைக்கழகங்களை அதிகளவில் நிறுவுவதற்கு விருப்பமற்றவர்கள் போட்டித் தன்மைக்கு முகம் கொடுத்து வெற்றிபெற முடியாதவர்கள் என்றே கருதப்படுவர்.

இவ்வாறானவர்களின் எதிர்ப்புக்கள் எந்த அளவு விரைவாக மறுக்கப்பட்டு புதிய வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகிறதோ அந்த அளவு விரைவாக நாட்டினதும் மாணவர்களும் நிலைமை சிறப்பானதாக மாற்றமடையும்.

தற்போது அரச பல்கலைக்கழகங்கள் வழங்குவதைத் தாண்டி இலங்கையில் பலதரப்பட்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி முறை இருந்தால், அது வெளிநாடுகளில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களையோ அல்லது வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு புலமைப்பரிசில்களைப் பெறுபவர்களையோ இங்கேயே இருக்க ஊக்குவிக்கும்.

நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த பிராந்திய உயர்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடியும், மேலும் இங்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளிலிருந்தும், மேலும் ஏனைய நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்க இலங்கைக்கு உதவும்.

எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி தரத்தை அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள உகந்த வகையில் மாற்றியமைத்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறான இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை மற்றைய நாடுகளை விடவும் பின்தங்கியுள்ளமை கவலைக்கிடமானது.

மாற்றத்தை ஏற்படுத்த முடியும் இப்போதும் நாம் தாமதித்துவிடவில்லை இலங்கையானது விரைவாக அபிவிருத்தியடைந்து எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், அதன் உயர்கல்வி கட்டமைப்பில் இந்த பரந்த மாற்றம் தேவைப்படுகின்றது.

கடந்த கால நடைமுறைகள், மரபுகள் அல்லது காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் காரணமாக இருக்கும் நிலைக்கு மாறாக, நமது சிறந்த மற்றும் சிறந்ததும் புதியதுமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இங்குள்ள அனைவரும் இந்நிலைமைகளை உணர்ந்துகொண்டு மாற்றத்தை ஏற்படுத்த முன்வருவீர்கள் என நம்புகிறேன்.

நமது நாட்டிற்கும், நமது வருங்கால சந்ததியினருக்கும் ஒரு சிறந்த நாளைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். நன்றி