10th December 2021 12:00:33 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்களின் ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (5) தியத்தலாவவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சிப் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது தளபதியவர்களால் கல்லூரியின் நீண்ட கால தேவையாக கருத்தப்பட்ட பிரிவொன்றும் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின்படி இலங்கை இராணுவத்தின் “முன்நகர்வுக்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025”, இன் கீழ் , 'Six in One Mall' Multi புதிய நலன்புரி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதில் சிற்றுண்டிச்சாலை, எழுது வினை பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையம், வரவேற்பு அறை, தையல் நிலையம், பணியாளர்களின் பயன்பாட்டிற்கான சலவை நிலையம் என்பன உள்ளடங்கியுள்ளது.இலங்கை இராணுவத் தொண்டர் படைப் பயிற்சிப் கல்லூரியின் தளபதி, கேணல் எச்.ஏ. கீர்த்திநாத அவர்கள், பிரதம விருந்தினரை வரவேற்றதோடு, கல்லூரி வளாகத்தை சுற்றிலும் மேற்பார்வை செய்வதற்காக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், பிரிகேடியர் வழங்கள், பயிற்சி மேற்பார்வை அதிகாரி,சில இலங்கை இராணுவ தொண்டர் படை அதிகாரிகளையும் செய்வதற்காக அழைத்துச் சென்றார்.
அதனையடுத்து இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதி ஜே.டி.சி.ஜி ஜயசிங்க அவர்களினால் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, (டிரைவ்-பாஸ்) முறையில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை ஏற்றுகொண்டதை தொடர்ந்து மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுடன் 'சிக்ஸ் இன் வன்’ நலன்புரி வியாபார தொகுதி தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சி கல்லூரி வளாகத்திற்கான விஜயத்தின் நினைவம்சமாக நாக மரக்கன்று ஒன்றினை நாட்டி வைத்த அவர், கல்லூரி வளாகத்திற்குள் மேம்படுத்தப்பட்ட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் மேற்பார்வை செய்தார். அதேபோல் தற்போது இடம்பெற்று வரும் நிர்மாண பணிகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
‘முன்நகர்வுக்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025”, இன் கீழ்' அத்தியாயம் ஐந்து (பிரிவு5.45 முதல் 5.53 வரை) விவரிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். அதனையடுத்து இலங்கை இராணுவ தொண்டர் படை கல்லூரி அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அதிகாரிகளுடனான விருந்துபசாரம் ஒன்றிலும் கலந்துகொண்டார்.
நிகழ்வின் நிறைவம்சமாக தளபதிக்கு இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சி கல்லூரியின் தளபதியவர்களால் நினைவுச்சின்னமொன்று வழங்கு வைக்கப்பட்டதை தொடர்ந்து தளபதியால் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்கள் பதிவிடப்பட்டது. முன்நகர்வுக்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025”, திட்டத்திற்கு அமைய இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சி கல்லூரியின் எதிர்கால முன்னேற்றதிற்கான செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
மறுதினம் (06) இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சி கல்லூரியினருக்கு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் மத நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பிக்குகளுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.