06th December 2021 17:58:07 Hours
மஹரகம வஜிராராம விகாரையின் வண.ஹொரவில சாந்தசிறி தேரரின் நிதியுதவில் அம்பலப்பெருமாள்குளம் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 23 மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (3) அம்மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
662 வது பிரிக்கேடின் 20 வது (தொ) விஜயபாகு காலாட்படையணி படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விநியோகம் 662 வது பிரிக்கேடின் மேற்பார்வையில் நன்கொடையாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பாடசாலை வளாகத்தினுள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 66 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கலந்து கொண்டார். சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், அமத்தியபுரம் ஆவே மரியா தேவாலயத்தின் அருட்தந்தை ஜேசுநாத் அல்போன்சு, சிரேஸ்ட அதிகாரிகள், அம்பலப்பெருமாள் குளம் கிராம உத்தியோகத்தர், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.