Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2021 14:18:14 Hours

படையினரால் குளக்கட்டு சீரமைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது படைப் பிரிவின் 562 வது பிரிக்கேடின் 15 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த நொச்சிக்குளம் பகுதியில் உள்ள ஆரியன்குளம் குளத்தை வெள்ளிக்கிழமை (26) சீரமைத்தனர்.

56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி பெரேரா 562 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏ.எம்.எஸ் பிரேமவன்ச ஆகியோரின் பணிப்புரைக்கமைய 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் இப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நொச்சிக்குளம் பகுதியில் உள்ள கிராம மக்களும் குளக்கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.