Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2021 08:45:24 Hours

கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனத்தினரால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் நன்கொடை

மெடிடெக்னோலொஜி ஹோல்டிங்ஸ் (தனியார்) லிமிடெட் நிறுவனத்தினரால் சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான மைண்ட்ரே போர்ட்டபிள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை (30) நன்கொடையாக வழங்கப்பட்டது.

இராணுவ வைத்தியசாலை பணிப்பாளர் பிரிகேடியர் ஷம்பக்க அத்தநாயக்க, இராணுவ வைத்தியசாலையின் கதிரியக்க வைத்திய நிபுணர் கேணல் ஷெஹான் வாஸ் மற்றும் இராணுவ வைத்தியசாலையின் மயக்க மருந்து வைத்திய நிபுணர் கேணல் ஷம்பிக அபேசிங்க ஆகியோரிடம் இந்த நன்கொடையை மெடிடெக்னோலொஜி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் திரு ரங்க ஜயக்கொடி மற்றும் உற்பத்தி பொறியியலாளர் திரு அமில தினுஷ ஆகியோரால் வழங்கப்பட்டது. நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் நடைப்பெற்ற சந்திப்பின் போது இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது பிரிகேடியர் ஷம்பக்க அத்தநாயக்க அவர்கள் நன்கொடையாளரின் தாராள மனப்பான்மைக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.