01st December 2021 17:00:30 Hours
அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவ தொழிலாண்மை ஊக்குவிப்பு மற்றும் அபிவிருத்தி பாடநெறி 41 இன் ஆரம்ப உரை மற்றும் வழிமுறைகள் பாடநெறி - 53 இன் நிறைவு உரை ஆகிய இரண்டும் திங்கட்கிழமை (29) திகதி சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம் பெற்றன.
மேற்கூறப்பட்ட பாடநெறிகளின் அடிப்படையில் இராணுவத்தில் உள்ள ஏனைய தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால சவால்கள் மற்றும் முயற்சிகளை எதிர்கொள்ள அவர்களை மேம்படுத்துகின்றன என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
புதிய பாடநெறிக்கான அறிமுகக் குறிப்புகள் மற்றும் வழிமுறைகள் பாடநெறியின் நிறைவு உரை ஆகியன அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்ஜீவ அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இப் பாடநெறிகள் இராணுவத் தளபதியின் “முன்னோக்கிய மூலோபாய திட்டம் - 2020/25’ எனும் தொனிப்பொருளிற்கிணங்க பாடநெறிகள் பங்கேற்பாளர்களை எதிர்காலத்தில் உயர் தரமான முயற்சிகளுக்குத் தயார்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டன, இதன் மூலம் அவர்கள் பயிற்சிகளில் கற்றுக்கொண்டதைத் தொடரவும் பயன்படுத்தவும் முடியும். பயிற்சி பணியகம் மற்றும் இராணுவ பயிற்சி மற்றும் கட்டளையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இப் பயிற்சியில் 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே.ஏ.சி.எஸ்.ஜெயவீர சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சின்னங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டதுடன் இப் பாடநெறியில் பங்கு பற்றிய ஏனைய மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.