Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2021 21:56:18 Hours

திருகோணமலை வழங்கல் கல்லூரியில் வெளிநாட்டவர்கள் உள்ளடங்களான வழங்கல் பிரிவினருக்கு பட்டமளிப்பு

திருகோணமலை இராணுவ வழங்கல் கல்லூரியில் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த அதிகாரிகளுக்கான பாடநெறி இல 7 இல் சித்தியடைந்த பங்களாதேஷ், நேபாள நாடுகளை சேர்ந்த இரு அதிகாரிகள் , இலங்கை கடற்படையின் இரு அதிகாரிகள், ஒரு விமானப்படை அதிகாரி உள்ளடங்களாக 26 மத்திய தர நிலை வழங்கல் பிரிவு அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை கல்வியற் கல்லூரியில் இன்று (27) பிற்பகல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் சிறப்பு அதிதிகள் , சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் முன்னிலையில் இராணுவ வழங்கல் கல்லூரியின் பட்டதாரி வீரர்களுக்கான பட்டம் வழங்கப்பட்டது. விழா அரங்கிற்கு பிரதம அதிதி வருவதற்கு முன்னதாக கடற்படை கல்வியற் கல்லூரி வளாகத்தில் கடற்படையினரால் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது. பிரதம அதிதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, பதவிநிலைப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, இலங்கை இராணுவ பயிற்சி கட்டளைகள் தளபதி நிஷாந்த மானகே மற்றும் இலங்கை இராணுவ வழங்கல் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர ஆகியோரால் வரவேற்கப்பட்டு கல்லூரியின் கேட்போர் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இராணுவ வழங்கல் கல்லூரியின் தளபதியின் வரவேற்புரையின் பின்னர் இராணுவ பயிற்சி கல்லூரியின் 26 பட்டதாரிகளுக்குமான சான்றிதழ்கள் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக இடம்பெற்ற இலங்கை இராணுவ கல்லூரியின் உயர் விருதுகளாக “சிறந்த வழங்கல் திட்டமிடுபவருக்கான விருது பங்களாதேஷ் இராணுவ மேஜர் எம்.டி அரிபுல் இஸ்லாமுக்கும், வழங்கல் பதவிநிலை பாடநெறி எண் 7’ இன் சிறந்த செயல்திறன் - விருதினை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையின் மேஜர் என்.டி.இ.எஸ் சில்வாவும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது உரையில், அன்றைய தினத்தின் கதாநாயகனாக, வழங்கல் தொடர்பான தொழில்முறை பாடநெறிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் எந்தவொரு நிறுவனத்தையும் முன்னேற்றுவதற்கு அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கினார். உலகில் நிலவும் சுகாதார அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், குறிப்பாக வெளிநாட்டு பட்டதாரிகளும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பின்னர், இராணுவ பயிற்சி கல்லூரியின் அதிகாரப்பூர்வ இதழான 'கோல்டன் லாக்' இன் வெளியீடு நிகழ்ச்சி நிரலில் மற்றொரு அம்சமாக காணப்பட்டது. நிகழ்விற்கான பிரதம அதிதி இராணுவத் தளபதி, மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரிடம் கன்னிப் பிரதிகள் கையளிக்கப்பட்டன. அன்றைய நிகழ்வுகளின் நிறைவில், இராணுவ பயிற்சி கல்லூரியின் தளபதிக்கு நினைவுகளைச் சேர்த்து நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் நினைவு சின்னத்தை பரிசளித்தார்.

வழங்கல் பற்றிய இராணுவ பயிற்சி கல்லூரியின் பாடநெறியானது, பொது பணி கடமைகள், வகிபங்கு மற்றும் பணிகள், தகவல்தொடர்பு விதிகள் மற்றும் மரபுகள், வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட கட்டளைகள், நிர்வாக கொள்கைகள், படையணி மட்டங்களில் வழங்கல் , வழங்கல் செயல்பாடுகள், வழங்கல் விதிமுறைகள், நடைமுறை மாற்றங்கள் மற்றும் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) உட்பட அரச துறை நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இராணுவ அதிகாரிகள் (பயிற்றுவிப்பாளர்கள்) மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் ஆதரவுடன் மே 2011 இல் நிறுவப்பட்ட இராணுவ வழங்கல் கல்லூரி (ஏஎஸ்எல்), சில ஆண்டுகளுக்கு முன்பு பனாகொட இராணுவ வளாகம் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்ட வழங்கல் தொடர்பான எனைய அனைத்து பயிற்சி நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தது.

இந்த பட்டமளிப்பு விழாவில் இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வழங்கல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் நவீன கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளை அறிந்து கொண்டு, வழங்கல் வல்லுனர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக 9 மே 2011 அன்று இராணுவ வழங்கல் கல்லூரி தொடங்கப்பட்டது. வழங்கல் பணிநிலை பாடநெறி வெற்றிகரமான பங்கேற்பாளர்களுக்கு வழங்கல் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வழங்கும்.