Header

Sri Lanka Army

Defenders of the Nation

03rd November 2021 17:19:26 Hours

தேசிய மற்றும் சமூக அபிவிருத்திக்கான திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக தளபதி யாழ்.விஜயம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தேசிய மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த மெகா வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று (3) காலை வேளையில் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

பளை விமான நிலையத்தை வந்தடைந்த தளபதிக்கு, வரவேற்பளித்த, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு தளபதியை அழைத்துச் சென்றார். இதன்போது நுழைவு வளாகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை மற்றும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மரியாதை ஏற்புக்கான மேடைக்கு தளபதி அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படை சிப்பாய்களால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதை அணிவகுப்புடன் வரவேற்பளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்திப்பின் போது, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களினால் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு தற்போதைய அபிவிருத்திகள், பாதுகாப்பு அக்கறைகள், சமூக அபிவிருத்திப் பாத்திரங்கள், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியமான திட்டமிடல்கள் தொடர்பில் விளக்கமளித்தார். சந்திப்பின் நிறைவில் சந்திப்பில் கலந்துகொண்ட சகலரும் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து விஜயம் செய்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியான இராணுவ தளபதியவர்கள் நிகழ்த்திய உரையின் போது, யாழ். குடாநாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்கும் விசேட கடமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிந்து அமைதியான சூழலை உருவாக்கி தொடர்ந்தும் தங்களது சேவைகளை வழங்கியமைக்காக நன்றிகளை தெரிவித்தார்.

அதேபோல், வடக்கில் உள்ள சிலர் தங்களது தனிப்பட்ட நன்மைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்களை திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் குடாநாட்டில் வாழும் தமிழ் சமூகம் மனிதாபிமான நடவடிக்கையின் போதும் தற்காலத்திலும் படையினரால் யாழ்ப்பாணத்தின் மீது காட்டப்படும் அக்கறையை நன்கறிவர். அதற்கமைவான கண்ணியமான பணியை படையினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

"கொவிட்-19 தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்து காணப்பட்ட காலப்பகுதியில் படையினர் விடுமுறைகளை பெற்றுக்கொள்ளாமல், சொந்த நலன்களை கருத்தில் கொள்ளாமல் தனிமைப்படுத்தல் மையங்களை பராமரித்தல், இடைநிலை பராமரிப்பு நிலையங்களை நிர்வகித்தல், கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட காலங்களை முகாமைத்துவம் செய்தல், வீதித் தடை பகுதிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் படையினர் அர்பணிப்புடன் ஈடுபட்டனர் என்றும் தனித்துவமான முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்தி இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் செயன்முறை மற்றும் தேசிய தடுப்பூசியேற்றும் பணிகள் வெற்றிகரமான அமைந்திருந்ததோடு, அதற்கான படையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். அதேநேரம் மேற்படி சவாலான பணிகளுக்கு மத்தியிலும் படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுதல், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்தல், சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல், வறிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்துகொடுத்தல், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் திட்டங்களை நிறுவுதல் உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொணடதன் விளைவாக பிராந்தியத்தில் அமைதியை நிலவச் செய்தனர் என தெரிவித்த இராணுவ தளபதி அதற்காக படையினருக்கு நன்றிகளையும் கூறிக்கொண்டார்.

அதேநேரம் விமான்பபடை மற்றும் கடற்படை வீரர்களும் குடாநாட்டில் பெரும் சேவைகளை ஆற்றியிருந்தனர் எனத் தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா புங்குடுதீவு துறைமுக பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவர்களது பணிகள் பன்மடங்காக அதிகாரிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார். அதிமேதகு ஜனாதிபதியவர்களும் பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் அவர்களும் உரிய ஆதரவுகளை வழங்குவதால் படையினருக்கான சகல திட்டங்களும் சாத்தியமாகியுள்ளன எனவும் தெரிவித்தார்.

அதனையடுத்து பலாலியில் அமைந்துள்ள 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையின் புதிய அலுவலக வளாகம் மற்றும் அதிகாரிகளுக்கான உணவக கட்டிடம் ஆகியவற்றை பிரதம விருந்தினர் திறந்து வைத்தார். இதன்போது யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையின் கட்டளை அதிகாரி ஆகியோருடன் இணைந்து மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் புதிய கட்டிடங்களின் பெயர் பலகைகளை தளபதியவர்கள் திறைநீக்கம் செய்துவைத்தார். அண்மையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டலுக்கமைய 7 வது இலங்கை இராணுவ மகளிர் படை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் படையின் அதிகாரிகளுக்கான விருந்தகம் ஒன்றின் தேவை நீண்டகாலமாக நிலவியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி திறப்பு விழா நிகழ்வில் 51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், வடக்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளின் தளபதி, பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், மற்றும் 7 வது இலங்கை இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறிமுறை படையினரால் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தல், இராணுவத்தால் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளை மற்றும் தென்னை மற்றும் பனை மரக்கன்றுகள் விநியோகம், இராணுவத்தால் பொதுமக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் மற்றும் இன்னும் சில நலத்திட்டங்கள் என்பனவும் மேற்படி நிகழ்வுகளின் போது கையளிக்கப்பட்டன.