Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2021 13:05:00 Hours

இலங்கை இராணுவத் தளபதிக்கு ரஸ்ய கிரெம்லின் சதுக்கத்தில் மாபெரும் இராணுவ மரியாதை

ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதியின் அழைப்பின் பேரில் மொஸ்கோவிலிருக்கும் இலங்கை இராணுவ தளபதிக்கு திங்கட்கிழமை (25) காலை ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவ் அவர்களினால் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சில் வைத்து இலங்கை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்விற்கு வருகை தந்த இலங்கை இராணுவ தளபதிக்கு அண்மைய காலத்தில் வழங்கப்பட்ட மிக உயரிய கௌரவம் வழங்கப்பட்டதோடு, ரஸ்ய தரைப்படைகளினால் அங்கிகரிக்கப்பட்டதும் தனித்துவமான அம்சங்களை பிரதிபலிக்கும் வகையிலும் முறையான மற்றும் சீரான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதன்போது புகழ்பெற்ற அணிவகுப்பு மைதானத்தில் இலங்கை மற்றும் ரஸ்ய நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதோடு, இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவரது பாரியார் மற்றும் ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் ஆகியோருக்கு மரியாதை அணிவகுப்புக்கான சீருடை அணிந்த சிப்பாய்களால் கௌரவம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து ரஸ்யாவின் மொஸ்கோவின் கிரெம்லின் சதுக்கத்தின் அலெக்ஸாண்ட்ரோவ்ஸ்கி கார்டனில் அமைந்துள்ள “தெரியாத சிப்பாயின் கல்லறை” க்கு இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேபோல் மொஸ்கோ நகரத்தில் அமைந்துள்ள போரில் உயிர் நீத்த ரஸ்ய போர் வீரர்களை நினைவுகூர்வதற்கான நினைவு தூபிக்கு மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் கிரெம்லின் நகரிலுள்ள ஆயுத அருங்காட்சியகத்திற்கு தளபதி அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா ரஸ்ய கூட்டமைப்பில் தங்கியிருந்த நாட்களில் மாஸ்கோவின் மிகைலோவ்ஸ்கயாவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உயர் ஆயுதக் கட்டளை கல்லூரிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததோடு, கல்லூரியின் தளபதியான மேஜர் ஜெனரல் ரோமன் பின்யுகோவ் ரஸ்யாவின் 4 வது கார்ட்ஸ் டேங்க படைப்பிரிவின் தளபதி நரோ - போமின்க்ஸ் இராணுவ பீரங்கி கல்வியற் கல்லூரி, இராணுவ மருத்துவ கல்வியற் கல்லூரி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ தளங்களுக்கும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதேநேரத்தில் 2020 பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த, ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவ் அவர்கள் விடுத்திருந்த நிலையில் அதற்கான பதில் விஜயம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் கொவிட் 19 பரவல் காரணமாக கால வரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.