Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2021 19:35:36 Hours

கனகராயன்குளம் விதவை பெண் ஒருவருக்கு இராணுவத்தினால் கட்டப்பட்ட புதிய வீடு திறந்து வைப்பு

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு இலங்கை பிரஜைகளால் வழங்கிய அணுசரனையுடன் இராணுவத்தால் கட்டப்பட்ட புதிய வீட்டை கனகராயன்குளம், விங்ஹானகுளம் பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட விதவை பெண் ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 561 வது பிரிகேட்டின் 16 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் தங்கள் தொழில்நுட்ப மற்றும் மனித வளத்தினை வழங்கி, இந்தப் பகுதியில் உள்ள வரிய குடும்பத்தைச் சேர்ந்த விதவை தமிழ்ப் பெண்ணுக்கு இந்தப் புதிய வீட்டைக் வழங்கினர்.

திருமதி சஞ்சீவன் குமுதுனி எனும் இந்த விதவைப் பெண் தனது குழந்தைகளுடன் முறையான தங்குமிடம் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதனை அறிந்து கொண்ட 561 பிரிகேட் படையினர் அஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி சுஜீவ தசநாயக்கவிடம் இருந்து கிடைத்த நிதி மூலம் இந்த வீட்டை அமைத்த்தோடு இந்த வீடானது இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டமானது மேஜர் ஜெனரல் எஎடிஎன்எஸ் துனுவில (ஓய்வு) மற்றும் திரு அஜித் பீ ரம்புக்கன ஆகியோரினால் ஒருங்கிணைக்கப்பட்டதோடு, 56 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யுயுகேஎல்எஸ் பெரேரா அவர்கள் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேஜர் ஜெனரல் எஎடிஎன்எஸ் துனுவில (ஓய்வு) அவர்களும் கெளரவ விருந்தினராக பங்கேற்றார்.

திரு அஜித் பி ரம்புக்கன மற்றும் பிரதான அனுசரணையாளர்களின் பிரதிநிதிகள் இந்த விழாவின் போது குடும்ப உறவினர்களிடம் இந்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் புதிய வீட்டின் சாவியை வழங்கினர்.

இந்த நிகழ்வில் 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேபிஎ பெரேரா, 561 வது பிரிகேட் தளபதி கேணல் ஜிஜிபி குலதிலக, 56 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் டப்யுகேஎஎ பிரியந்தலால் மற்றும் 16 வது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எம்எஸ் சூரியபண்டார ஆகியோர் இந்த கலந்து கொண்டனர்