Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2021 09:50:10 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி நலன்புரி வியாபார நிலையத்திற்கு அடிக்கல் நட்டார்

கொஸ்கமவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையின் வளாகத்தில் தலைமையகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், அப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் செவ்வாய்க்கிழமை (12) வியாபார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இலங்கை இராணுவத் தொண்டர் படையின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜெயசிங்க அன்றைய பிரதம விருந்தினரை வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் படைத் தலைமையகத்தின் அபிவிருத்தி வேளைகள் மற்றும் அதன் எதிர்கால தேவைகளை மதிப்பீடு செய்யும் நோக்கத்துடன் வளாகத்தினை சுற்றி பார்வையிட்டதோடு இரண்டாவது முறையாக அனைத்து அதிகாரிகளுக்கும் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் , அதிகாரிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.