14th October 2020 09:14:47 Hours
கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அதிகமான நோய் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் கட்டாயம் சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்தும் சுகாதார செயல்பாட்டு வழிமுறைகளை விளக்கிய அவர் அனைத்து படையினர், தொற்று நோயியல் நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள், கொவிட் -19 கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் கொத்தணி இனங்காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார். பொது சுகாதார பரிசோதகர்கள் ஒருங்கிணைந்து அவர்களை தனிமைப்படுத்தல் மையங்கள் அல்லது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் அவர்கள் பாதிக்கப்பட்ட தொழிற்சாலை உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணப்பட்டு உறுதிப்படுத்துகின்றனர். அத்தோடு அனைத்து முதல் மற்றும் இரண்டாவது தொடர்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.
பொது மக்களின் சிரமத்தை குறைத்து முன்னேற்றங்கள் மற்றும் சுகாதார தேவைகளுக்கு ஏற்ப தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செயற்படுத்தப்படும். அத்தோடு பொதுமக்கள் சுகாதார ஊழியர்களுக்கு அளிக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் பாராட்டப்படுகிறது என்று மேலும் தெரிவித்தார்.
முழு காணொளி இங்கே: Sports Shoes | Nike Off-White