10th October 2020 17:57:01 Hours
இராணுவ தினம் மற்றும் 71 ஆவது இராணுவ ஆண்டுவிழா (ஒக்டோபர் 10) தினமான இன்று 10 ஆம் திகதி மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட இராணுவத்தின் 12 சிரேஷ்ட பிரிகேடியர்களில் 09 பேருக்கு பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் காலை ஸ்ரீ ஜெயவர்தனபுரயிலுள்ள உள்ள இராணுவ தலைமையகத்தின் தளபதி அலுவலகத்தில் வைத்து புதிய தரவரிசை சின்னங்கள் அணிவிக்கப்பட்டனர்.
64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியான இலங்கை சிங்க படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் அஜித் பல்லேவல, 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியான கொமாண்டோ படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, தகவல் தொழில் நுட்ப பணிப்பாளர் நாயகமான இலங்கை சமிக்ஞை படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பாளர் நாயகமான இலங்கை இலேசாயுத காலாட்படையை சேர்ந்த மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே, காலாட்படை பயிற்சி மையத் தளபதியான கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சம்பிக ரணசிங்க, 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியான கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாரத சமரகோன், 53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியான விஜயபாகு காலாட்படையைச் சேர்த மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியான இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க, மற்றும் பொறியியலாளர் சேவைகள் பணிப்பாளர் நாயகமான பொறியாளர்கள் சேவைப் படைணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஹன கணேகொட ஆகியோருடன் பிரிகேடியர், கர்னல், லெப்டினன்ட் கேணல், மேஜர், கெப்டன், லெப்டினன் மற்றும் இரண்டாம் லெப்டினன் உள்ளிட்ட தரங்குளுக்கு 502 அதிகாரிகள் 71 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையில் அதிமேதகு ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இராணுவத்திற்கு ஒரு மதிப்புமிக்க சேவையை வழங்கிய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர்களின் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் தரத்திற்கான,பீக் தொப்பிகள்,கேண்கள் மற்றும் வாள்களை வழங்கிய பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அந்த அதிகாரிகள் அனைவருக்கும் நினைவு சின்னங்களை வழங்கினார் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் ஊடகக் கருத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:Buy Kicks | Air Jordan 1 Retro High OG University Blue - Gov