Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2020 06:45:21 Hours

குழு சுற்றுலாவிற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வு

கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் செயற்குழு அதன் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இன்று (2) ராஜகிரியவில் கூடியது. இதில் வைத்திய நிபுணரும் பொது சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் எஸ். ஸ்ரீதரன், நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்குபற்றினர்.

நாட்டில் தொற்றுநோயின் நிலைமை மற்றும் புதிதாக பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பாக மேலோட்டமாக ஆராயப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா முதலில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்று, கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். இங்கு முறையான அதிகாரத்தின் கீழ் வெளிநாட்டிலிருந்து அழைத்து வருதல் திருப்பி அனுப்புதல் செயன்முறை மற்றும் செலவுகளின் நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதேவேளையில் ரஷ்ய விமானத்தின் குழு மற்றும் இந்தியன் எண்ணெய் கப்பல் ஆகிய முந்தைய இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்த விதம், தற்போதைய நிலைமை மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் இதுவரை நாட்டிற்கு அழைத்துச் வரப்பட்டுள்ள சுமார் 50,000 க்கும் மேற்பட்டவர்களில் இன்னும் 7000 பேர் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளமை தொடர்பாகவும் விவாதித்கப்பட்டது.

மேலும் நீண்டகால மற்றும் குறுங்கால சுற்றுலாவுக்கு பி.சி.ஆர் சோதனைகளுடன் விமான நிலையத்தை திறப்பது குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் ஒரு குழுவாக வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் செல்ல அனுமதிப்பார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் ஹோட்டல் நிர்வாகங்களின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட சில விரும்பத்தகாத சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது.

சிறந்த திட்டங்களுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு வழிகாட்டுதல்களை ஏற்பாடு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குழு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.latest Running Sneakers | Sneakers