Header

Sri Lanka Army

Defender of the Nation

25th September 2020 05:36:39 Hours

முதல் கட்ட பட்டதாரி பயிற்சி நிரைவடையும் நிலையில்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ‘சௌபாக்கிய தெக்ம' திட்டத்தின் கீழ் அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ள 50,000 பட்டதாரிகளுக்கான ஒரு மாத கால இராணுவ தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின் முதல் கட்டமானது நிறைவடையும் தருவாயிலில் உள்ளன. இராணுவம், அரசதுறை பங்களிப்பை சிறந்த வகையில் மாற்றுவதற்கான இப் பயிற்சியானது விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிப்புற பயிற்சி நடவடிக்கைகள், குழு நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஐந்து கட்டமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தொகுதிகளின் கீழ் நடாத்தப்படுகின்றது.

பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படைப் பிரிவுத் தலைமையகங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உள்ளிட்ட நாடுபூராகவுள்ள 51 இராணுவ நிலையங்களில் திங்கள்கிழமை (செப்டம்பர் 14) ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்டத்தில் 10,000 பேர் வதிவிட பயிற்சி பெற்று வருகின்றனர்.

பயிற்சியளிக்கப்பட்ட, முழுமையான மற்றும் ஆற்றல்மிக்க பணியாளர்களாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்வதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக பயிற்சி பணிப்பகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது, இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது மற்றும் ஏழு பாதுகாப்பு படை தலைமையக மட்டத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகிறது.

இறுதி இரண்டு வாரங்களில் பட்டதாரிகள் இராணுவ விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் துறை அறிஞர்களின் உதவியுடன் தலைமை, உந்துதல், உடல் தகுதி மற்றும் குழு கட்டமைப்பில் முறையாக பயிற்சி பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது இலங்கை இராணுவம் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட பட்டதாரிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

இந்த ஐந்து மாதங்கள் முழுவதும் இந்த பட்டதாரி பயிற்சி திட்டத்தை கருத்தியல் செய்வதற்கான மூலோபாய வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு இராணுவத் தலைமையகம் ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்பு கொள்ளும். பயிற்சித் திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் இராணுவத் தலைமையகத்தில் உள்ள பயிற்சி பணிப்பகத்தினால் பல்வேறு மட்டங்களில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து வழங்கப்படும். Asics footwear | Nike Shoes