Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2020 21:04:34 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2020' க்கான மரதன் ஓட்ட போட்டி

இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2020 க்கான இராணுவ மரதன் ஓட்ட போட்டியானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான, கொவிட் - 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் (26) ஆம் திகதி சனிக்கிழமை இராணுவ தலைமையகத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியில் 17 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 125 ஓட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இராணுவ தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த 22 கி.மீ மரதன் ஓட்ட மெய்வள்ளுநர் போட்டி பனாகொடை இராணுவ முகாம்மில் முடிவடைந்தது.

இலங்கை இராணுவ மெய்வள்ளுநர் சங்கத்தினரால் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹெரேந்திர ரணசிங்க தலைமையில் இடம் பெற்ற இப் போட்டியில், சுமார் 15 மகளிர் மரத்தன் ஓட்டப் பந்தய வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப் போட்டியானது காலை 06.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, தியத உயன வழியாக பத்தரமுல்ல, மாலாபே, அதுருகிரிய, ஹபரகட, கொடகம, பனாகொடாவில் உள்ள இராணுவ ஜிம்னாசியத்தில் முடிவடைந்தது.

இப் போட்டியில் இறுதியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இளம் வீரர்களின் போட்டி திறமைக்கு ஒரு ஊக்குவிப்பு வழங்கினார், பதவி நிலை பிரதானியும்,இராணுவ விளையாட்டு கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அன்றைய பிரதம அதிதியுடன், மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேஜர் ஜெனரல் ஹெரேந்திர ரணசிங்க ஆகியோரும் இணைந்திருந்து, இப் போட்டியில் தங்களது திறமையை வெளிகாட்டிய அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் பதக்கங்கள் மற்றும் வெற்றி கிண்ணங்களை வழங்கினார்.

1951 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ மரதன் ஓட்ட பந்தய சாம்பியன்ஷிப், போட்டியில் இன்றுவரை பல தேசிய மற்றும் சர்வதேச அளவில் இராணுவ மரத்தன் ஓட்டப்பந்தய வீரர்களை நாட்டிற்கு உருவாக்கியுள்ளது.

இராணுவ விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி, சர்வதேச தரத்திற்கு இணையாக இராணுவ மரதன் ஓட்ட போட்டி தேசிய மற்றும் சர்வதேச நடுவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஊடக உரையாடல் பின்வருமாறு கூறினார்.

"இன்று, 55 ஆவது இராணுவ மரதன் ஓட்ட போட்டியானது இராணுவ வீரர்களின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்த உதவுகிறது, விளையாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சாம்பியன்ஷிப் நிகழ்வைத் தொடர்வதன் மூலம், இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் மகளிர்களை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்த உதவியுள்ளோம். மற்றும் சர்வதேச விளையாட்டுக்கள் கொவிட் - 19 தொற்று இருந்த போதிலும், அவர்களின் விளையாட்டுத் திறன்கள் மற்றும் விளையாட்டுத் திறன்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த பந்தயத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம், "என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 நோய் தொற்றில் இருந்து, பொதுமக்கள் தங்கள் சுகாதார நடைமுறைகளைப் புறக்கணிக்காமல் தொடருமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன் மாத்தறையில் உள்ள வெளிநாட்டவர் தொடர்பாக மேற்கொண்ட பரிசேதனையில் எது விதமான நோய் தொற்று இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சாதனையாளர்களின் பட்டியல் பின்வருமாறு;

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் - (ஆண்கள் பிரிவு) - இலங்கை பீரங்கி

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் - (மகளிர் பிரிவு) - இலங்கை இராணுவ மகளிர் படை

ஆண்கள் பிரிவு

முதலாவது இடம்- இலங்கை பீரங்கி – படையணியின் – லான்ஸ்/பொம்படியர் கே.சம்முகேஸ்வரன்

இரண்டாம் இடம்- இலங்கை இராணுவ சிங்க படையணியின் –கோப்ரல் பி.கே.கே.எஸ்.எம் குணசேகர

மூன்றாம் இடம் - கெமுனு ஹேவா படையணியின் – கோப்ரல் ஜீ.எம்.எஸ்.ஆர் விஜேவிக்ரம

மகளிர் பிரிவில்

முதலாவது இடம் - இலங்கை இராணுவ மகளிர் படையணியின்- சாதாரன வீராங்கனை W. M. ஹேராத்

இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சாதாரன வீராங்கனை P. M. S செவ்வந்தி

மூன்றாம் இடம் - இலங்கை இராணுவ சிமிக்ஞை படையணியின் சாதாரன வீராங்கனை M. G. I. K. K சுகதபால trace affiliate link | Autres