Header

Sri Lanka Army

Defender of the Nation

19th September 2020 17:13:10 Hours

இராணுவ தளபதியின் உத்தரவின் பேரில் இரண்டு புதிய (புரோஸ்தெடிக்) பிரிவுகள் நிர்மாணிப்பு

விசேட தேவையுடைய போர் வீரர்களின் நலன் கருதி இரண்டு புதிய (புரோஸ்தெடிக்) பிரிவானது நிர்மாணிக்கப்பட்டு கடந்த (15) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மையங்களான அனுராதபுரத்தில் உள்ள 'அபிமன்சல -1' மற்றும் பான்கொல்ல 'அபிமன்சலா -3' ஆகிய நிலையங்களில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த இரு பிரிவுகள் அபிமன்சல இரண்டு மையங்களுக்கான கட்டளை தளபதிகளால் திறந்துவைக்கப்பட்டன.

இந்த நிலையத்தின் மூலம் செயற்கை அவய உறுப்புகளை சரிசெய்தல் மற்றும் இரண்டு விசேட பிரிவுகளுடன் பெரும்பாலும் அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் விசேட தேவையுடைய போர் வீரர்களுக்கு இது உதவும் முகமாக திகழ்கின்றது. ராகம ரணவிரு செவன அல்லது காலியில் உள்ள 'செனசும' போன்ற நிலையங்களிளும் இந்த பிரிவுகள் அமைக்கப்பட்ட்டுள்ளன.

இரு பிரிவுகளின் தொடக்க நாளிலும், அனுராதபுரம், குருநாகல, புத்தளம், கண்டி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 12 விசேட தேவையுடைய போர் வீரர்கள் இரு ஆரோக்கிய ரிசார்ட்டுகளிடமிருந்தும் உதவி கோரினர், இது அனுராதபுரம் மற்றும் குருநாகல் பகுதிகளில் இதுபோன்ற இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருவதை நிரூபித்தது. அந்த இரண்டு பிரிவுகளும் இப்போது நாடாளாவிய ரீதியாக அனைத்து விசேட தேவையுடைய போர் வீரர்களுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள அபிமன்சல-1 மையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் துசித்த ஹெட்டியாராச்சி மற்றும் அபிமன்சல -3 மையத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அருண விஜயகுணவர்தன போன்ற அதிகாரகளால் இந்த பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டன. இச்சந்தர்பத்தில் நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். url clone | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos