Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2020 09:30:26 Hours

54 ஆவது படைப் பிரிவின் 10ஆவது ஆண்டு நிறைவு விழா

மன்னாரில் அமைந்துள்ள 54 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் 10 ஆம் திகதி படைப் பிரிவு தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது. இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மன்னார் வைத்தியசாலை வளாகத்தினுள் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆண்டு நிறைவை முன்னிட்டு திருக்கேதிஸ்வரம் ஆலயம், ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் புனித செபஸ்டியான் கிறிஸ்தவ ஆலயத்தில் சமய ஆசிர்வாத மதவழிபாடுகள் இடம்பெற்றன. அத்துடன் மன்னார் முதியோர் இல்லத்திலிருந்த 28 முதியோர்களுக்கும், அன்னை இல்ல சிறுவர் இல்லத்திலுள்ள 30 சிறார்களுக்கு இம் மாதம் முதலாம் திகதி மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இம் மாதம் 06 ஆம் திகதி பிரித் கோஷ பௌத்த ஆசிர்வாத பூஜைகள் மேற்கொண்டு மறுநாள் 15 பௌத்த தேர ர்களுக்கு தானங்களும் வழங்கி வைக்கப்பட்டு 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களது தலைமையில் தலைமைய வளாகத்தினுள் 4 புதிய புத்தர் சிலைகளும் வைக்கப்பட்டன.

மேலும் படைப் பிரிவு வளாகத்தினுள் புதிதாய் அமைக்கப்பட்ட தொலைக்காட்சி அறை, பொழுது போக்கு அறை மற்றும் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களது சமையலறை கட்டிடங்கள் இம் மாதம் 09 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இம் மாதம் (10) ஆம் திகதி ஆண்டு நிறைவை முன்னிட்டு படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர் படைத் தளபதி அவர்களினால் 54 ஆவது படைப் பிரிவின் தலைமையக வளாகத்தின் நுழைவாயிலில் சிங்கத்தில் சிலையொன்றும் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

அத்துடன் படை வீரர்களின் சுபசாதனை நிமித்தம் தலைமையகத்தினுள் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட ஆகார சாலை திறந்து வைக்கப்பட்டு பின்னர் அன்றைய தினம் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் படைத் தளபதி அவர்கள் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD