Header

Sri Lanka Army

Defender of the Nation

13th September 2020 21:37:20 Hours

பூரன குணமாகி 14 நபர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம் கோவிட் மையம் தெரிவிப்பு

இன்றைய (13) ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களாவர். கத்தாரிலிருந்து வந்த (22) பேருக்கும், குவைத்திலிருந்து வந்த (2) பேரும், இந்தியாவிலிருந்த வந்த ஒருவருக்கும், ஐத்தியோப்பாவிலிருந்து வந்த ஒருவரும் இந்த கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பெரியகாடு, முல்லைத்தீவு, சீதுவை அமாஹி ஹோட்டலிலும், டொல்பின் ஹொட்டல் மற்றும் ஜெட்விங் ப்ளு ஹோட்டல்லில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று கோவிட் தேசிய தடுப்பு நடவடிக்கை மையம் தெரிவித்தது.

இன்று (12) காலை 6.00 மணி வரை கந்தக்காடு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 649 ஆகும். அவர்கள் 528 நபர்கள் மறுவாழ் கைதிகள், 67 ஊழியர்கள், 5 விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவர் ஆவார்.

சென்னையிலிருந்து 6E 9034 விமானத்தில் 13 பயணிகளும், டுபாயிலிருந்து EK 648 விமானத்தில் 49 பயணிகளும், டோகார் கட்டாரிலிருந்து QR 668 விமானத்தில் 64 பயணிகளும், இந்தியாவிலிருந்து 6E 9036 விமானத்தில் 29 பயணிகளும், டுபாயிலிருந்து UL 226 விமானத்தில் 292 பயணிகளும் இம் மாதம் (13) ஆம் திகதி காலை இலங்கையை வந்தடைந்தனர் இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இன்று தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 13 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு வீடுகளுக்கு வெளியேறியுள்ளனர்.

இன்று (13) ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 40,659 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வீடுகளுக்கு வெளியேறிச் சென்றுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 5,816 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இம் மாதம் (11) ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1630 ஆகும். இது வரைக்கும் மேற்கொண்ட முழுமையான பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கை 251,792 ஆகும்.

14 பேர் முழுமையாக குணமடைந்து இன்று (13) காலை வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 12 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும், 02 பேர் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த கைதிகள். அதன்படி கந்தக்காடு போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 11 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தவிர சமூகத்திலிருந்து எவரும் தொற்றாளர்களாக பதிவாகவில்லை. இருந்தும் இலங்கையர்கள் அனைவரும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) Sports Shoes | Nike Off-White