Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2020 06:00:26 Hours

மேலும் 1890 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன

இன்று காலை (12) நிலவரப்படி மேலும் 14 நபர்கள் COVID-19 தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மாலத்தீவு (5), ஐக்கிய அரபு இராஜ்சியம் (2) மற்றும் டுபாய் (7) ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவரும் கொக்கல லோங் பீச் ஹோட்டல், எகோ சர்ப் திஸ்ஸ, பூனானி, நுவரவெவ அரலிய ஹோட்டல் மற்றும் நுரைச்சோலை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். என கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.

இன்று (12) காலை 6.00 மணி வரை கந்தக்காடு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 649 ஆகும். அவர்கள் 528 நபர்கள் மறுவாழ் கைதிகள், 67 ஊழியர்கள், 5 விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவர்.

விமானம் QR 648 டுபாயில் இருந்து 04 பயணிகளுடனும் மற்றும் 54 பயணிகளுடன் தோஹா கட்டாரிலிருந்து QR 668 விமானம் இன்று (12) காலை இலங்கைக்கு வந்துள்ளது. மற்றும் அபுதாபியிலிருந்து EY 264 விமானம் இன்று வரவுள்ளது. வந்தடையும் அனைவரும் விமான நிலைய சம்பிரதாயங்களுக்குப் பிறகு முப்படையினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

இன்று (12), பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 95 பேர் தங்கள் வீடுகளுக்கு புறப்படுகிறார்கள். அவர்களில், ருவல கற்பிட்டியிலிருந்து 01 , முதலாவது கெமுனு ஹேவா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 31 பேர், தியதலவா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 29 பேர், ஹெய்கித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 01 , பெல்வேர தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 18 பேர், ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 14 பேர் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைகள் படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 1 அந்த வகையில் இன்று காலை (12) வரை 40,401 பேர் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முப்டையினால் நிர்வகிக்கப்பட்டும் 57 தனிமைப்படுத்தல் நிலையங் களில் 6,021 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். நேற்று (11) நாடு முழுவதும் 1890 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இதுவரை நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 249,328 ஆகும்.

14 பேர் முழுமையாக குணமடைந்து இன்று (12) காலை வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 12 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும், 02 பேர் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த கைதிகள். அதன்படி கந்தக்காடு போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 11 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தவிர சமூகத்திலிருந்து எவரும் தொற்றாளர்களாக பதிவாகவில்லை. இருந்தும் இலங்கையர்கள் அனைவரும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (முடிவடைகிறது) jordan release date | Nike SB