Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2020 09:06:19 Hours

வில்பத்து காட்டு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 54 ஆவது படைப் பிரிவினால் 268 ஏக்கர் பரப்பில் 8603 மரக்கன்றுகள் நடுகை

இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘துரு மிதுரு நவ ரடக்’ எனும் தொணிப்பொருளின் கீழ் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட வில்பத்து காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 90 சதவீதமானது நிறைவு செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மண்டலங்களில் முதலாம் கட்டத்தின் கீழ் 76.5 ஏக்கர் நிலப்பரப்பில் 8603 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. .

இம் மாதம் (15) ஆம் திகதி இரண்டாம் கட்டத்தின் கீழ் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேலும் ஏழு மண்டலங்களின் கீழ் சுமார் 268 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மரங்களை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் ஆரம்ப கட்டமாக மாலபையிலுள்ள ஹொரைசன் சர்வதேச கல்லூரியின் ஆசிரியர்கள்,

மாணவர்கள் மற்றும் நிருவாகத்தினர் சுயட்சையாக முன்வந்து படையினருடன் கைகோர்த்து 200 மரக்கன்றுகளை வில்பத்திலுள்ள கல்லாரு மண்டலத்தில் நடுகையிட்டு தேசிய காடு வளர்ப்பு திட்டத்தில் தங்கள் பங்கை வகித்தனர். இந்த கல்லூரி நிருவாகத்தினர்கள் இந்த மரநடுகைகளுக்கான உரங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பல மரக்கன்றுகளை இப்பிரதேசத்திற்கு கொண்டு வந்து தங்கள் மரநடுகைகளை மேற்கொண்டனர்.

இராணுவ பாரிய முயற்சியுடன் வில்பத்து காடழிப்பு திட்டமானது 2019 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் தற்போதைய இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொணிப்பொருளின் கீழ் இந்த ஊக்குவிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மரக்கன்று நடுகை திட்டத்தின் ஆரம்ப விழாவில் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இப்படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp