Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2020 08:21:37 Hours

புதிய 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

புதிதாய் பதவியேற்ற 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி ராஜபக்‌ஷ அவர்கள் இம் மாதம் (22) ஆம் திகதி நந்திகடாலில் அமைந்துள்ள 682 ஆவது படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களை 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான கேர்ணல் சமிந்த கலப்பத்தி அவர்கள் வரவேற்று பின்னர் படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய கௌரவ மரியாதை வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். இறுதியில் குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

பின்னர் புதிய படைத் தளபதி அவர்கள் 68 ஆவது படைப் பிரிவின் பயிற்சி பாடசாலைக்கும், 18 ஆவது விஜயபாகு காலாட் படையணி முகாமிற்கும், 4 மற்றும் 6 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கும் விஜயத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . jordan Sneakers | Gifts for Runners