27th July 2020 12:21:37 Hours
விஷேட படையணியின் சுழியோடிகளின் பயிற்சி நிறைவு நிகழ்வானது இம் மாதம் (25) ஆம் திகதி முல்லைத்தீவு நாயாரில் அமைந்துள்ள விஷேட படையணி சுழியோடி பயிற்சி முகாமில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் பிரதி செயலாளர் திரு பி.பீ.எஸ்.சி நொனிஸ் அவர்கள் வருகை தந்தார்.
இந்த சுழியோடி பயிற்சிகளை விஷேட படையணியைச் சேர்ந்த 2 அதிகாரிகளும், 24 படை வீரர்களும், கொமான்டோ படையணியைச் சேர்ந்த 8 படை வீரர்களும், விமானப்படை விஷேட படையணியைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், 2 படை வீரர்களும் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் இராணுவ தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் பிரதீப் சில்வா, நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா, மத்திய கட்டளை தளபதி, விஷேட படையணியின் பிரிக்கட் கட்டளை தளபதி, முல்லைத்தீவு மற்றும் 59 ஆவது படைப் பிரிவின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy shoes | Nike Running