27th July 2020 11:21:37 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் தனது புதிய பதவியேற்பின் பின்பு கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு மதவழிபாடுகள் நிமித்தம் இம் மாதம் (23) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் தலதா மாளிகையின் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளான தேரர்களை சந்தித்து ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் முதலில் தலதா மாளிகைக்கு சென்றார் அச்சந்தர்ப்பத்தில் தியவடன நிலமே அவர்கள் வரவேற்றார். பின்னர் தலதா மாளிகையில் இடம்பெற்ற பூஜைகளில் ஈடுபட்டார். பின்னர் மதிப்புக்குரிய வரகாஹொட மற்றும் ஞானரத்னஹிந்தான மஹாநாயக தேரர் அவர்களை சந்தித்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் நெல்லிகலையில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த நிலையத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டு வதுருகும்புரே தம்மரத்ன அவர்களை சந்தித்து அவரது ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டு யடிலாகல இராஜகிரிய விகாரைக்கும் விஜயத்தை மேற்கொண்டார்.
புதிய படைத் தளபதி அவர்களுக்கு ‘செத் பிரித்’ ஆசிர்வாத வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் புதிய படைத் தளபதியுடன் தேரர் தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 112 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | Nike Shoes