27th July 2020 05:21:37 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்கள் தனது பதவியேற்பின் பின்பு இம் மாதம் (22) ஆம் திகதி ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள 64 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னாஹொட, கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்து கொண்டனர். best Running shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp