27th July 2020 14:21:37 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்கள் இம் மாதம் (26) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
புதிதாய் பதவியேற்ற படைத் தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பௌத்த, கத்தோலிக்கம், இந்து மற்றும் இஸ்லாமிய மத அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை தனது பணிமனையில் கையொப்பமிட்டு பாரமேற்றுக் கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ உயரதிகாரிகள் புதிய படைத் தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்பு படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளை மேற்கொண்டு தலைமையக குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.
மேலும் அன்றைய தினம் புதிய படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார். இதன் போது பெருமை மிக்க அமைப்பின் வீரர்களாக தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் அனைத்து அணிகளிடையே அர்ப்பணிப்பு மற்றும் தொழில் முறை திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் நியமிக்கப்பட்ட கடமைகளை பொறுப்புனர்ச்சியுடன் செய்ற்படுத்த வேண்டும என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் படைத் தளபதிகள், முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி, கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Mens Flynit Trainers