Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2020 22:03:51 Hours

படைக்கலச் சிறப்பணிக்கு வீரவிலையில் சுற்றுலா விடுதி நிர்மானிப்பதற்கான ஏற்பாடுகள்

இராணுவ படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும், 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரதாப திலகரத்ன அவர்களால் படைக்கலச் சிறப்பணிக்கு வீரவிலையில் புதிதாய் அமைப்பதற்காக நிர்மானித்து வரம் சுற்றுலா விடுதிக்கான அடிக்கல் இம் மாதம் (17) ஆம் திகதி நாட்டி வைக்கப்பட்டது.

இலங்கை படைக்கலச் சிறப்பணி அதிகாரிகளின் நலன்புரி நலன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப திலகரத்ன, படைக்கலச் சிறப்பணியின் பிரிக்கட் தளபதி பிரிகேடியர் தாரக ரத்னசேகர, மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் சுமித் தேவபிரிய, பிரதி கட்டளை தளபதி கேர்ணல் பியல் விஜயசிறிவர்தன, 4 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பியல் விஜயசூரிய மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike sneakers | Men Nike Footwear