Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2020 16:39:38 Hours

டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 83வருடபழைய மாணவர் சங்கம் பதவி நிலை பிரதானிகான வரவேற்பு

பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் 55 ஆவது படைப்பிரிவின் தளபதியாக பதவியேற்றதன் நிமித்தம் கொழும்புடி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் 83ம் வருடபழைய மாணவர் சங்கத்தினர் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலைதாஜ் சமுத்ரா ஹோட்டலில் வரவேற்பு நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களால் விழா நாயகனும் அவர் தம் பாரியாரும் வரவேற்கப்பட்டனர் தொடர்ந்து வரவேற்பு உரையுடன் விழா நாயகனின் வாழ்க்கை பற்றிய சுருக்கமான விளக்கத்தினை பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் பிரசாத் அகுரந்திலக அவர்களால் வழங்கினார்.கலாசார அம்சங்கள் மற்றும் இராணுவ இசைக்குழுவின் இனிமையான மெல்லிசை என்பன விழாவினை மெருகூட்டின.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பழைய மாணவர் சங்கத்திற்கும் நாட்டிற்கும் இராணுவத்திற்கும் செய்த சேவைகளைப் பாராட்டும் வகையில் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களின் கைதட்டல்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் மேடையில் சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.அதன் போது விழா நாயகன் கல்லூரி நாட்களில் அவரது நினைவுகளைப் நினைவுப்படுத்தி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதியும் இலங்கை துறைமுக அதிகார சபை தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, மறைந்த கல்லூரியின் ஸ்தாபக தந்தையின் துணைவியார் திருமதி ரோஹினி அலெஸ் மகன் திரு ஹர்ஷ அலெஸ் ஆகியோர் பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்தனர். அவரது இராணுவ சகாக்களில் பலர், ஓய்வு பெற்றவர்கள் சிலர் இன்னும் சேவையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அன்றைய நிகழ்வின் ஒர் அம்சமாக சீட்டிழுப்பில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்யவதற்கு அன்றைய பிரதம அதிதி அழைக்கப்பட்டார்.அதனோடு இரவு விருந்து உபசார இடம்பெற்றது.அத்துடன் ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக திரு சுசாந்த பாலச்சந்திர அவர்களினால் நன்றியுரை தெரிவிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை கீதம் பாடப்பட்டது.

மேஜர் ஜெனரல் குணவர்தன தனது மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இராணுவ வாழ்க்கையில் பல கட்டளை நியமனங்களை வகித்துள்ளார், இதில் வெடிபொருள் அகற்றுதல் பிரிவின் கட்டளை அதிகாரி, 8வது கள பொறியாளர் படை (காலாட்படை) மற்றும் 6வது கள பொறியாளர் படை (கள பொறியாளர்) கட்டளை அதிகாரியாகவும், அதே காலகட்டத்தில் அவர் வவுனியா சுரங்க நடவடிக்கை தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்தார்.பின்னர் பருத்தித்துறை 524 ஆவது காலாட்படையிள் தளபதியாகவும் இலங்கை பொறியாளர்படையின் நிலைய தளபதியாகவும் அதன் பின்னர் பொறியாளர் படையின் தளபதியாகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

கமாண்டர் இன்ஜினியர் பிரிகேட் என்ற முறையில், சுரங்கப்பாதை செயலாக்கத்தையும் அதன் தரங்களையும் இலங்கை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மிக உயர்ந்த அங்கீகாரத்திற்கு விரிவுபடுத்தினார்.

அவர் 2020 ஜூன் 1 ஆம் தேதி இராணுவத்தின் 55 வது பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார். jordan release date | Men's Footwear