25th July 2020 23:23:39 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களுக்கு இம் மாதம் (24) ஆம் திகதி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த அணி வகுப்பு மரியாதைகள் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
ஓய்வு பெற்றுச் செல்லும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி தனது பதவியை பாரமளிக்கும் ஆவணங்களில் கையொப்பமிட்டு பாரமளித்து கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் பணி புரியும் அனைவருடன் குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘நெலும் பியஷ’ கேட்போர் கூடத்தில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றி தான் சேவையாற்றிய காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் இராணுவத்தினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
அன்றைய தினம் இரவு விடைபெற்றுச் செல்லும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிக்கு கிளிநொச்சி தலைமையக அதிகாரி விடுதியில் இரவு விருந்தோம்பல் ஒழங்கு செய்யப்பட்டிருந்தன. இச்சந்தர்ப்பத்தில் படைத் தளபதிகள், கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி, கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | Asics Onitsuka Tiger