25th July 2020 17:13:01 Hours
இலங்கை இராணுவத்தில் 12 ஆவது தலைமை கள பொறியியலாளராக மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் (24) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மத சம்பிரதாய வழிப்பாட்டிற்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு தனது அலுவலகத்தில் கடமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர், அலுவலகத்தில் உள்ள அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் அவரது புதிய நியமனம் குறித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இவர் அகுரேகொட பாதுகாப்பு தலைமையக திட்டத்தின் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவருக்கு பதிலாக மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் தலைமையகத்தின் தலைமை கள பொறியாளர், அதிகாரி மற்றும் படையினர்கள் கலந்து கொண்டனர். Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp