Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2020 17:14:20 Hours

மேஜர் ஜெனரல் அப்ரூ 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக பதவியேற்பு

மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்கள் 56 ஆவது படைப் பிரிவின் 22 ஆவது படைத் தளபதியாக மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் 23 ஆம் திகதி புதன் கிழமை வவுனியா படைத் தலைமையகத்தில் வைத்து கடமை பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட படைப் பிரிவின் படை தளபதிக்கு 21 ஆவது சிங்க படையணி படையினர்களால் நுலைவாயிற் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், படைத் தலைமையகத்தில் இவரின் பதவியின் நினைவாக மரக் கன்றும் நடப்பட்டன. தொடர்ந்து மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்கள் மகா சங்கத்தினரின் செத் பிரித் ஓதலுடன் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு கடமையை பொறுப் பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 56 ஆவது படைப் பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் பலர் கலந்துகொண்டனர். bridgemedia | 『アディダス』に分類された記事一覧