20th July 2020 11:14:43 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களுக்கு இலங்கை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் இம் மாதம் (17) ஆம் திகதி 1000 பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் மகேஷ் குணசேகர, செயலாளர் திரு ஜகத் அபேசிங்க, பொலன்னருவை செஞ்சிலுவை கிளையின் நிறைவேற்று அதிகாரி திரு காமினி நந்தகுமார, திருமதி சமந்தி விஜயகோன் போன்றோரினால் இந்த பாதுகாப்பு அங்கிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
சுகாதார தேவைகளின் நிமித்தம் கிழக்கு மாகாணத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு பயண்படும் முகமாக இந்த பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov