Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2020 15:59:45 Hours

இராணுவ மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பு ஆரம்பம்

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியில் (எஸ்.எல்.சி.எம்.எம்) இராணுவ மருத்துவத்தில் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பட்டப்படிப்பின் ஆரம்ப வெளியீட்டு நிகழ்வானது இன்று (23) ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் உள்ள கேட்போர் கூடத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இராணுவ மருத்துவ கல்லூரியின் கல்வி அமர்வுகள் மற்றும் இராணுவ மருத்துவத்தில் பட்டப்படிப்பு திட்டங்கள் அண்மையில் பாதுகாப்புப் தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவ மருத்துவப் படையனியின் படைத் தளபதியும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சய முனசிங்கவிற்கு வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் சமீபத்தில் உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு கலந்தாலோசித்து ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் செயலாளர், உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைத் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டனர்.

அதன்படி, அடிப்படை பட்டப்படிப்பில் தகுதி பெற்ற அனைத்து முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும், இராணுவ மருத்துவத்தில் முதுகலைப் படிக்கும் திறன் கொண்டவர்கள், அவர்கள் விரும்பினால், அது கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவக் கழகத்தில் (பிஜிஐஎம்) நடத்தவும் ஒழங்குகள் செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கைகளின் போது, தற்போதுள்ள அறிஞர்களிடையே ஒரு சுருக்கமான அறிவியல் மற்றும் கல்வி கலந்துரையாடல், வெவ்வேறு விளக்கங்களையும் பிற அவதானிப்புகளையும் சமர்ப்பித்தது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது சுருக்கமான உரையின் போது அதிகாரிகளின் தொழில் முன்னேற்றத்தில் ஒரு தொகுதியாக இராணுவ மருத்துவத்தைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வானது சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்குகள் ஏற்றி வைத்து ஆரம்பிக்கப்பட்டன. Sport media | Nike Shoes