Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2020 19:04:54 Hours

முல்லைத்தீவு முகாம் முற்றுகையில் உயிர் நீத்த படையினருக்கு நினைவஞ்சலி

1996 ஆம் ஆண்டு ஜூலை 17 – 18 ஆம் திகதிகளில் எல்டிடிஈ முற்றுகையின் போது துனிச்சலான செயற்பாடுகளை மேட்கொண்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களை நினைவு படுத்தி இம் மாதம் (18) ஆம் திகதி நினைவு கூறும் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு 9 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் லலித் ஏபா அவர்களின் அழைப்பையேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்கள் வருகை தந்தார்.

எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின் போது 9 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த 119 பேரும், 6 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த (572) பேரும் 5 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த (119) பேரும் முழுமையாக 44 அதிகாரிகளும், 1125 படை வீரர்கள் இந்த நாட்டிற்காக தங்களது உயிர்களை தியாகம் செய்தனர். .

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம விருந்தினரான முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களது உறவினர்கள் இந்த இராணுவ நினைவு தூபிக்கு சென்று மலரஞ்சலிகளை செலுத்தினர். .

மேலும் இந்த நிகழ்வில் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 591, 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், 12 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 24 ஆவது சிங்கப் படையணி, 6 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 14 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் இணைந்திருந்தனர். latest Nike Sneakers | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers