Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2020 23:48:25 Hours

புங்குடுதீவில் இராணுவத்தினரால் “ தேசிய ஒற்றுமையின் சின்னமாக" புதிய வீடுகள் அமைத்து ஆளுநரினால் திறந்து வைப்பு

யாழ் தீபகற்பத்தில் வேலனை பகுதிகளில் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப நபர்கள் 25 பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புதிய வீடுகள் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டு இன்றைய தினம் 18 ஆம் திகதி அந்த வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

நகர்புற மேம்பாடு, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சினால் வழங்கிய நிதியுதவியின் பிரகாரம் 51 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 5 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் பூரன பங்களிப்புடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வீட்டு திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகான ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், கோவிட் செயற்பாட்டு மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ் மாவட்ட செயலாளர் திரு. கே மகேஷன், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, வடமாகாண பிரதான செயலாளர் திரு. ஏ. பத்திநாதன், வடமாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளர் திரு. எல். இளங்கோவன், 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்னாயக மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த வடமாகாண ஆளுநரான திருமதி பி.எஸ்,எம் சாள்ஸ் அவர்கள் இராணுவத்தினரால் “ தேசிய ஒற்றுமையின் சின்னமாக" சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் வெற்றிகரமாக நிர்மானிக்கப்பட்டு இந்த வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப பயனாளிகளுக்கு வழங்கியமை தொடர்பாக இராணுவத்தினருக்கு தனது நன்றிகளை ஆளுநர் தெரிவித்தார். மேலும’ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் "நான் பல ஆண்டுகளாக இராணுவத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறேன், எந்த இலக்கையும் வெற்றி கரமாக முடிப்பதில் இவர்கள் வல்லுநர்கள். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான இந்த வீட்டுவசதி திட்டமானது இராணுவத்தினரால் மேற்கொண்டமை இன்று அமைதியான சகவாழ்வுக்கான ஒரு எடுத்துக்காட்டு மற்றும் ஊக்குவிப்பாக அமைகின்றது. ஏனெனில் இது தேசிய ஒற்றுமையின் அடையாளமாக உள்ளது. அவர்களின் மதிப்புமிக்க அர்ப்பணிப்பு மற்றும் இந்த திட்டத்திற்கு இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார் மற்றும் உதவி வழங்கிய அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்தார்.

வீட்டுவசதி திட்டத்தின் ஆரம்ப பணிகள் நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டன, வடக்கு மாகாணத்தின் கல்வித் திணைக்களத்தின் செயலாளர் திரு. எல். இளங்கோவன் அவர்களால் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பின்னர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க அவர்களின் பூரன கண்காணிப்பின் கீழ் 5 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் 5 இலட்சம் ரூபாய் செலவில் மின்சாரம், நீர் மற்றும் சுகாதார வசதிகளுடன் சாப்பாட்டு அறை, படுக்கை அறைகள், சமையலறை மற்றும் பிற அலகுகளை உள்ளடக்கப்பட்டு இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் மற்றும் இராணுவ தளபதி அவர்களாலும் இந்து மத சம்பிரதாய ஆசிர்வாத மதவழிபாடுகளின் பின்பு 25 பயணாளிகளுக்கும் இந்த புதிய வீடுகளுக்கான சாவிகள் மற்றும் உரிமை ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் இராணுவ தளபதி அவர்களும் தனது கருத்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வானது சுகாதார வழிக்காட்டுதல்களின் கீழ் பயனாளிகள் மற்றும் பொது மக்களது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas footwear | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp