Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2020 18:14:43 Hours

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் நன்கொடையாளரான திரு குமார வீரசூரிய மீண்டும் தனது சகாக்களுடன் சுன்னாகத்திலுள்ள உடுவில் தெற்கு பகுதியில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு புதிய வீடு கட்டுவதற்கான நிதியுதவிகளை வழங்கி வைத்தார்.

இந்த பகுதியில் கஸ்ட்டங்களுக்கு மத்தியில் வசித்து வந்த திருமதி கே. சாஹிதா அவர்களது நிலைமையை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது அவதானத்திற்கு கொண்டு வந்த நிலையில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களது மேற்பார்வையின் கீழ் 511 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 9 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பூரன பங்களிப்புடன் இந்த புதிய வீடு நிர்மானிப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புதிய வீட்டு நிர்மான பணிகள் முழுமையாக்கப்பட்டு இம் மாதம் 19 ஆம் திகதி திறப்பு விழா இடம்பெற்றது. இதன் போது இந்த வீட்டு உரிமையாளரான பயனாளிக்கு இராணுவத்தினரால் வீட்டு சாவி வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்த புதிய வீடானது இந்து சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு நன்கொடையாளரான திரு வீரசூரிய அவர்களால் திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் 51 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

அத்துடன் இதே நன்கொடையாளரால் கொடிகாமம் தெற்கு பகுதியில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப நபரொருவருக்கு புதிய வீடொன்றை கட்டுவதற்காக நிதியுதவிகள் வழங்கி இம் மாதம் (19) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப நபரான திருமதி மஞ்சுளா ஞானேஸ்வரன் அவர்களுக்கு புதிய வீடுகள் நிர்மானிப்பதற்கு முதல் கட்டமாக அடிக்கல் நாட்டுதல் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன. இந்த கட்டிட நிர்மான பணிகள் 52 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 7 கஜபா படையணியினரால் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Nike for Men