18th July 2020 22:00:51 Hours
இராணுவ சேவா வனிதா பிரிவிற்கு நிதி சேகரிக்கும் முகமாக பலாலி இராணுவ குடியிருப்பு பகுதியினுள் தயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் ‘ஜோக்கட்’ தயாரிப்பு நிலையம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் இன்று (18) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களது கருத்திட்டத்தின் கீழ் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரது நலன்புரி நிமித்தம் இந்த உற்பத்தி நிலையமானது திறந்து வைக்கப்பட்டன.
கடந்த சில மாதங்களாக இந்த கருத்திட்டத்தின் கீழ் 44 வீடுகளுக்கு நிதி உதவிகள், 5 புதிய வீடுகள் நிர்மானித்தல், 7 குளியலறை பெட்டிகள், 18 இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவிகள், காது கேட்கும் இயந்திரங்கள், மருத்துவ பாகங்கள், மடிக்கணனிகள், விளையாட்டு உபகரணங்கள், முன்பள்ளி உதவிகள், அழகு கலாச்சாரம், மலர் அலங்காரங்கள், தேனி உற்பத்திகள், மல்லிகை மற்றும் மசாலா விற்பனை நிலையம், பேக்கரி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த “ஜோகட்” தயாரிப்பு நிலையமானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் அழைப்பிற்கேற்ப பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இன்றைய தினம் (18) ஆம் திகதி ரிபன்கள் வெட்டி திறந்து வைக்கப்பட்டன.
இந்த தொழிற்சாலையானது 5 ஆவது இராணுவ சேவைப் படையணியினால் நிர்வகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf