Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2020 19:23:47 Hours

பலாலி இராணுவ குடியிருப்பில் வாவி, உடற்பயிற்சிகூடம் திறந்து வைப்பு

யாழ் படையினரது நலன்புரி நிமித்தம் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட இராணுவ துருப்புக்களின் நீர்ப்பாசன நிபுணத்துவம் சூரியனின் கதிர் ஆற்றல் மூலம் பயண்படுத்தும் முகமாக புதிய வாவி மற்றும் நடை பாதை பலாலி இராணுவ குடியிருப்பு பகுதியினுள் இன்று 18 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

இந்த வாவிக்கு “ரவிந்த வாபி” என்று பெயரிடப்பட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன. இந்த வாவியானது அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10 ஆவது பொறியியல் படைப் பிரிவு மற்றும் 5 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டன.

இந்த வாவியின் பெயர் பலகை இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டு பின்னர் அந்த பகுதிகளில் இராணுவ தளபதி அவர்களினால் மரநடுகைகளும் மேற்கொள்ளப்பட்டு அந்த வாவி பகுதிகளையும் இராணுவ தளபதி அவர்கள் பார்வையிட்டு அங்குள்ள இராணுவத்தினருடன் உரையாடல்களையும் மேற்கொண்டார்.

இந்த வாவிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின் பிரசாரம் தொழில்நுட்ப மேற்பார்வை மற்றும் நிதியுதவி யாழ் நீர்ப்பாசன பொறியாளரால் வழங்கப்பட்டது. இந்த வாவியானது இந்த பிரதேசத்திற்கு ஒரு கசிவு பாதையாக கருதப்படுகின்றது. ஆகையால் மிகவும் தேவையான மழை நீர் வளத்தை சேமிக்க கூடியதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் புவியியல் ரீதியாக சுற்றியுள்ள பகுதிகளில் நீர் தக்கவைப்பை வளப்படுத்தவும் உதவுகின்றது.

இந்த ‘ரவிந்து வாபி’ என்ற பெயரின் தொணிப் பொருளானது இது நல்வாழ்வு யாழ்ப்பாணத்திற்காக உதயமாகும் சூரியனின் கதிர்களின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது, இது 65 கன மீட்டர் மழை நீரைத் தக்கவைக்கும் திறன் கொண்டது மற்றும் 900 மீ சுற்றளவை உள்ளடக்கியதாக விளங்குகின்றது.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 51,52 மற்றும் 55 ஆவது படைத் தளபதிகள், வடக்கு முன்னரங்க கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் சுகாதார வழிக்காட்டுதல்களுக்கு ஏற்ப இந்த நிகழ்வானது இடம்பெற்றன.

மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் அழைப்பின் பிரகாரம் இராணுவ தளபதி அவர்கள் பலாலி இராணுவ குடியிருப்பு பகுதியினுள் புதிதாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை இன்று 18 ஆம் ரிபன் வெட்டி இராணுவ தளபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த உடற்பயிற்சி கூடத்தினுள் பெட்மின்டன், டெனிஸ், கூடைப்பந்து மற்றும் கரப்பந்தாட்ட கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன இவைகளை இராணுவ தளபதி அவர்கள் பார்வையிட்டு அங்குள்ள படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Kicks | Gifts for Runners