Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2020 21:45:27 Hours

இராணுவ தளபதி அவர்களினால் 55 ஆவது படைப் பிரிவில் புதிய உடற்பயிற்சிகூடம் திறந்து வைப்பு

கோவிட் – 19 செயற்பாட்டு மையத்தின் தலைவர், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வடக்கு பிரதேசத்திற்கு இரண்ட நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட நிலையில் யாழ் கடைக்காட்டில் அமைந்துள்ள 55 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு படையினர்களுக்காக புதிதாக நிர்மானிக்கப்பட்ட உடற்பயிற்சிகூடம் இராணுவ தளபதியினால் இம் மாதம் (17) ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டன.

இராணுவ தளபதி அவர்கள் 55 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அவர்களது தலைமையில் ஏஐஏ காப்புறுதி கம்பனி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி அனுசரனை நிதியுதவியுடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓய்வு பெற்ற கடற்படை உயரதிகாரியான லெப்டின ன்ட் கொமாண்டர் டீ.எம்.எஸ் ஜயவர்தன அவர்களது உதவியுடன் இந்த உடற்பயிற்சி கூடமானது நிர்மானிக்கப்பட்டன.

55 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி அவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் வரவேற்று பின்னர் இராணுவ படையினரால் சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார். பின்னர் இராணுவ தளபதி அவர்கள் உடற்பயிற்சிகூட வளாகத்திற்கு சென்று மங்கள விளக்குகளை ஏற்றி ரிபன்களை வெட்டி இந்த புதிய உடற்பயிற்சிகூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் இராணுவ தளபதி அவர்கள் இந்த உடற்பயிற்சிகூடத்தினுள் இருந்த உபகரணங்களை பார்வையிட்டு இது தொடர்பாக அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடல்களையும் மேற்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகெதர அவர்கள் வாழ்த்துரையை நிகழ்த்தினார். பின்னர் இராணுவ தளபதி அவர்களுக்கு 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்கள் நினைவுச் சின்னமொன்றையும் பரிசாக வழங்கி வைத்து கௌரவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் தன்னிச்சையாக உதவியை வழங்கிய ஓய்வு பெற்ற கடற்படையைச் சேர்ந்த உயரதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் டீ.எம்.எஸ் ஜயவர்தன அவர்கள் இராணுவ தளபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்து கௌரவித்தார்.

இந்த உடற்பயிற்சிகூடமானது நீண்டகாலம் 55 ஆவது படைப் பிரிவினுள்ள படையினர்களுக்கு தேவையின் நிமித்தம் இருந்த இடையில் இது தொடர்பாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் அவதானத்திற்கு முன்வைத்த போது இந்த உடற்பயிற்சிகூடம் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

தேசிய சேவை வங்கியின் தலைவர் எம்.எஸ் கோஷில ஜயவர்தன, ஏஐஏ காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூத்த பிராந்திய முகாமையாளர் திரு சன்ன துனுசிங்க மற்றும் கேகாளை ஏ.ஐ.ஏ காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் திரு நிலந்த பண்டார, ஓய்வு பெற்ற மூத்த கடற்படை அதிகாரி டி.எம்.எஸ் ஜயவர்தன போன்றோரின் நிதியுதவியுடன் 55 ஆவது படைப் பிரிவின் படையினரது ஒத்துழைப்புடன் இந்த உடற்பயிற்சிகூட கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த உடற்பயிற்சிகூடமானது 110 அடி நீளமும், 60 அடி அகலம் மற்றும் 35 அடி உயரத்தை கொண்டுள்ளதுடன் பெட்மின்டன் கூடமும் இதனுள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உடற்பயிற்சிகூடமானது 6.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | Nike - Shoes & Sportswear Clothing